
புதிய மக்கள்தொகை கொள்கையின் வரைவு அசாம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.அதில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்பவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படாது என தெரிவித்துள்ளது.
அதாவது, புதிய மக்கள்தொகை கொள்கைக்கான வரைவு அஸ்ஸாம் மாநில அரசின், சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப் பட்டது. அதில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் விதமாக ஒரு புதிய சட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது அரசு .
அதன் படி, 2 குழந்தைக்கு மேல் குழந்தைகள் பெற்றுக்கொள்பவர்கள் அனைவருக்கும் அரசு வேலை மறுக்கப்படும் என்றும், ஒரு வேளை அரசு வேலை பெற்றால், அவர் மேலும் உயர்பதவி வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது
மேலும், குழந்தை திருமணம் செய்துக் கொள்பவர்களும் அரசு வேலையை பெறுவதற்கான தகுதி இழக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது .
பெண்களுக்கு சிறப்பு சலுகை
கல்லூரி படிப்பு வரை இலவசமாக பெண்களுக்கு வழங்கவும்
பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18லிருந்து 21ஆக மாற்றுவது,
பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பது உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
50 சதவீதம் இட ஒதுக்கீடு
பெண்களுக்கு 5௦ சதவீத இட ஒதுக்கீடு வழங்கவும் ஆலோசனை மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும் அஸ்ஸாம் மாநில சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது