வாஜ்பாயின் சேவை முன்னுதராணமாக திகழ்கிறது - மோடி புகழாரம்

Asianet News Tamil  
Published : Dec 25, 2016, 01:22 PM ISTUpdated : Sep 19, 2018, 02:53 AM IST
வாஜ்பாயின் சேவை முன்னுதராணமாக திகழ்கிறது - மோடி புகழாரம்

சுருக்கம்

முன்னாள் பிரதமர்  அடல் பிஹாரி வாஜ்பாயின் 92-வது பிறந்தநாளையொட்டி குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தொிவித்துள்ளனர்.

வாஜ்பாய்,தனது 92-வது பிறந்தநாளை எளிமையான முறையில் இன்று காெண்டாடுகிறார். இதனையாெட்டி, நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சியுடன் அவர் நீண்ட காலம் வாழ இறைவன் அருள்வானாக என தனது வாழ்த்துச் செய்தியில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

பிரதமர்  மாேடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "எங்களின் மிகுந்த அன்பிற்குரியவரும், மதிப்பிற்குரியவருமான அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தொிவித்துக்காெள்வதாக குறிப்பிட்டுள்ளார். அவர் நல்ல உடல்நிலையுடன்  நீண்ட ஆயுள் வாழவேண்டும் என கடவுளை பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ள பிரதமர், அனைவரிடத்திலும் மிகவும் பிரியமான அவர், தலைமையேற்று நாட்டின் வளா்ச்சிக்காக அவர் மேற்காெண்ட சேவை முன்னுதராணமாக திகழ்கிறது என்றும் தொிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

TVK - CONGRESS: திமுக கூட்டணி' டமால்! தளபதி விஜய் ஆட்சி அமைக்க நிபந்தனையுடன் காங்கிரஸ் ஆதரவு! என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா?
Digital Ration Token: ரேஷன் வாங்க இனி டோக்கன் அவசியம்..! இனி மணிக்கணக்குல வெயிட் பண்ண வேண்டாம்