“கண்ணா இது வெறும் டிரைலர் தான்…” – பா.ஜ.க. எம்பிக்கள் கூட்டத்தில் மோடி ஆவேசம்

 
Published : Nov 23, 2016, 04:15 PM ISTUpdated : Sep 19, 2018, 02:01 AM IST
“கண்ணா இது வெறும் டிரைலர் தான்…” – பா.ஜ.க. எம்பிக்கள் கூட்டத்தில் மோடி ஆவேசம்

சுருக்கம்

கடந்த 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த்து.இந்த அறிவிப்பை தொடர்ந்து பாஜகவுக்கும்,எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் காரணமாக கடந்த 16ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் அமளியால் பாராளுமன்றம் இன்று 5-வது நாளாக முடங்கியது.

பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு சென்று ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பு தொடர்பாக விளக்கம் அளிக்கும் வரை கூட்டத்தை நடத்த விடமாட்டோம் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. ஆனால் நாடாளுமன்றத்தில் இதுபற்றி பேச பிரதமர் மோடி முன்வரவில்லை.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பா.ஜ.க. மூத்த தலைவர்கள் மற்றும் பா.ஜ.க. எம்.பி.க்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தற்போது நாடு முழுவதும் வங்கிகளில் ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாட்டை போக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்றும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட் டது. அதோடு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து போராடுவதை எப்படி தடுப்பது என்றும் விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து பா.ஜ.க. எம்.பி.க்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், “ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு தற்போதைய நடவடிக்கையுடன் முடிந்து போன ஒன்றல்ல. இந்த நாட்டில் 70 ஆண்டுகளாக உள்ள கருப்பு பணத்தையும், ஊழலையும் ஒழிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையின் தொடக்கம் தான். வரும் நாட்களில் இந்த நடவடிக்கைகள் தீவிரமாகும்” என் றார்.

மேலும், “ரூபாய் நோட்டு செல்லாது நடவடிக்கையில் கிடைக்கும் நன்மை குறித்து மக்களிடம் நேரில் எம்.பி.க்கள் விளக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

PREV
click me!

Recommended Stories

காங்கிரஸ்க்கு கிரீன் சிக்னல் கொடுத்த விஜய்..? போனிலேயே நடந்து முடிந்த டீல்.. கலக்கத்தில் திமுக
இடைவெளி விடுங்கள்.. EMI கட்ட வேண்டியுள்ளது.. வைரலாகும் காரின் பின்புறம் ஓட்டப்பட்ட ஸ்டிக்கர்..