மோடி அரசை ஒழிக்கணும்னா நாம ஒன்று சேரணும்... வங்கத்துக்கு பெண் புலிக்கு ரகசிய அழைப்பு விடுக்கும் ப.சிதம்பரம்..!

By vinoth kumarFirst Published Jan 18, 2020, 6:32 PM IST
Highlights

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குடியுரிமைச் சட்டம் தொடர்பான போராட்டத்தை ஒருங்கிணைக்கும் வகையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் குடியுரிமைச் சட்டத்துடன், ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்டவற்றை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குடியுரிமைச் சட்டம் தொடர்பான போராட்டத்தை ஒருங்கிணைக்கும் வகையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் குடியுரிமைச் சட்டத்துடன், ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. காங்கிரஸ் ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை. இந்த விவகாரத்தில் தனித்தே போராடுவோம் என மம்தா பானர்ஜி கூறியிருந்தார். 

இது தொடர்பாக கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ப.சிதம்பரம்;- எங்கள் நோக்கம் குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ) மற்றும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்.பி.ஆர்) ஆகியவற்றின் மோசமான நோக்கத்தை எதிர்த்துப் போராடுவது ஆகும். இந்த மூன்றையும் எதிர்த்து போராடும் எதிர்க்கட்சிகள் ஒன்று திரள வேண்டும். தேசிய மக்கள் பதிவேட்டை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. தனித்தே போராடுவோம் என கூறிய மம்தா பானர்ஜிக்கு மறைமுகமாக ப.சிதம்பரம் அழைப்பு விடுத்துள்ளார். 

click me!