
மேற்கு வங்காள பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரை பிரதமர் நரேந்தி மோடி மரபுகளை மீறிச் சென்று நேரில் வரவேற்றார். இன்று இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். இதில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரவை எதிர்பார்த்து…
வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா 4 நாட்கள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய ஹசீனாவை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார். சிவப்புக் கம்பளத்தில் நடந்து சென்ற மோடி விமானத்தின் படிக்கு அருகே சென்று ஹசீனாவின் வருகையை எதிர்பார்த்து நின்றார். பின்னர் அவர் வந்ததும், பூங்கொத்தினை வழங்கி, மத்திய அமைச்சர்களையும் உயர் அதிகாரிகளையும் ஹசீனாவுக்கு மோடி அறிமுகம் செய்து வைத்தார்.
மக்களோடு மக்களாக
முன்னதாக மோடி தனது இல்லத்தில் இருந்து விமான நிலையத்திற்கு செல்லும்போது, பொதுமக்கள் பயன்படுத்தும் வழியிலேயே அவரது காரும், பாதுகாப்பு வாகனங்களும் சென்றன. மோடியின் விமான நிலைய பயணத்தையொட்டி எந்தவித கட்டுப்பாடுகளும் சாலையில் விதிக்கப்படவில்லை. பிரதமராக பொறுப்பு ஏற்ற பின்னர் முதன்முறையாக அவர் இந்தியாவுக்கு வருகிறார். அதே நேரத்தில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் வங்காள தேச பிரதமர் ஒருவர் இந்தியாவில் தற்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது 4 நாட்கள் இந்திய சுற்றுப் பயணத்தில், குடியரசு தலைவர் மாளிகையில் ஹசீனா தங்குவார்.
குடியரசு தலைவர் மாளிகை
இன்றைய தினம் பிரதமர் மோடியும் ஹசீனாவும் சந்தித்து பேசவுள்ளனர். அப்போது, வங்காள தேசத்தில் அணு உலைகளை அமைப்பது உள்ளிட்ட ஆக்கப்பூர்வ வழிகளுக்கு அணு சக்தியை பயன்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேசவுள்ளனர். மேலும் பாதுகாப்பு துறை தொடர்பாக வங்காள தேசத்துக்கு இந்தியா ரூ. 3,200 கோடி வழங்கவுள்ளது. இதுதொடர்பாக இரு நாட்டுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவுள்ளது. இதேபோன்று டீஸ்டா ஒப்பந்தம் தொடர்பாகவும், ஹசீனா பேசவுள்ளார். இதில் சம்பந்தப்பட்ட மேற்கு வங்காள முதல் அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
பஸ், ரெயில் சேவை
அவரும் டீஸ்டா ஒப்பந்தம் தொடர்பாக ஹசீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன் தொடர்ச்சியாக கொல்கத்தாவுக்கும் – மேற்கு வங்காளத்தின் குல்னாவுக்கும் இடையே பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்தை இரு நாட்டு பிரதமர்களும் தொடங்கி வைக்கவுள்ளனர். நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வங்காளதேசத்துக்கு இந்தியா டீசல் விநியோகம் செய்வது தொடர்பான ஒப்பந்தம், ஹசீனாவின் இந்த பயணத்தின்போது முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளது.
தொழில் அதிபர்களுடன்…
நாளை அஜ்மீர் தர்காவுக்கு செல்லும் வங்காள தேச பிரதமர், திங்களன்று இந்திய தொழில் அதிபர்களை அவர் சந்தித்து பேசுகிறார். வங்காள தேசத்தின் விடுதலைக்கு போராடிய ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பெயர், டெல்லியில் உள்ள பார்க் தெருவுக்கு சூட்டப்படவுள்ளது. இதற்கான ஒப்புதலை டெல்லி மாநகராட்சியும் வழங்கியுள்ளது. ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகள்தான் வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா என்பது குறிப்பிடத்தக்கது.