அதிகரிக்கும் டெங்கு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உயர்மட்ட ஆய்வுக்கூட்டம்!

By Manikanda Prabu  |  First Published Sep 27, 2023, 8:05 PM IST

நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது


இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த இரண்டு மாதங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. டெங்கு காய்ச்சல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் 600க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தை கடந்துள்ளது.

நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நாட்டில் டெங்கு காய்ச்சல் நிலைமை, டெங்கு தடுப்பு, கட்டுப்படுத்துதல் மற்றும் நிர்வகிப்பதற்கான பொது சுகாதார அமைப்பின் தயார்நிலைக் குறித்து ஆய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டம் த்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் இன்று நடைபெற்றது.

Tap to resize

Latest Videos

அப்போது, நாடு தழுவிய டெங்கு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் விளக்கப்பட்டது. நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையால் ஏற்படும் சவாலை சுட்டிக்காட்டிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, டெங்குவுக்கு எதிராகத் தயாராக வேண்டியதன் முக்கியத்துவத்தை குறிப்பிட்டார். டெங்கு தடுப்புக்கான, மேலாண்மை நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், முழுமையாக தயார்படுத்தவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

சென்னை ஐஐடி-க்கு பிளாட்டினம் சான்றிதழ்!

நோய் கண்டறியும் உபகரணங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது என்றும், டாக்டர் மாண்டவியா எடுத்துரைத்தார். சுகாதாரப் பணியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்படுத்த மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மாநிலங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், டெங்குவைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கு செயலாக்கத் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு மத்திய அரசால் போதுமான நிதி வழங்கப்படுகிறது என்றும் மத்திய சுகாதார அமைச்சர் கூறினார்,

தமிழகத்தை பொறுத்தவரை டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் அக்டோபர் 1ஆம் தேதியன்று 1000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

click me!