shiv sena: உடைந்தது சிவசேனா ; ஷிண்டே ஆதரவு எம்.பி.க்கள் தனிக்குழு: சின்னத்துக்கு போராடத் தயார்: ராவத்

By Pothy RajFirst Published Jul 19, 2022, 1:58 PM IST
Highlights

மகாராஷ்டிரா சட்டப்பேரவையிலும் சிவ சேனா கட்சி பிளவுபட்ட நிலையில், நாடாளுமன்றத்திலும் பல்வேறு எம்.பி.க்கள் தனியாகச் செயல்பட முடிவு செய்துள்ளனர். 

மகாராஷ்டிரா சட்டப்பேரவையிலும் சிவ சேனா கட்சி பிளவுபட்ட நிலையில், நாடாளுமன்றத்திலும் பல்வேறு எம்.பி.க்கள் தனியாகச் செயல்பட முடிவு செய்துள்ளனர். 

இதற்காக ஏராளமான எம்.பி.க்கள் சேர்ந்து, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் தனியாக மனு அளித்து, தங்களை தனியாகச் செயல்பட அனுமதிக்குமாறும், அங்கீகரிக்குமாறும் கோர உள்ளனர். 

கிரிப்டோகரன்சியை தடை செய்ய ரிசர்வ் வங்கி விரும்புகிறது: நிர்மலா சீதாராமன் அதிர்ச்சித் தகவல்

அவ்வாறு அளி்த்தால், பால்தாக்கரே கட்டமைத்த சிவ சேனா கட்சி உடைந்துவிட்டதாகவே அர்த்தமாகும். ஆனால், சிவசேனா கட்சி உடையாது என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நம்புகிறார். 

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான மகாவிகாஸ் அகாதி ஆட்சி நடந்து வந்தது. ஆனால், சிவசேனாவின் மூத்த எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40 எம்எல்ஏக்கள் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து, பெரும்பான்மை இல்லாமல் மகாவிகாஸ் அகாதி அரசு கவிழ்ந்தது. 

பாஜகவின் துணையுடன், ஏக்நாத் ஷிண்டே முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். சட்டப்பேரவையைிலும் பெரும்பான்மையை ஷிண்டே நிரூபித்துவிட்டார். சட்டப்பேரையில் மட்டும் சிவசேனா கட்சி பிளவுபடவில்லை, நாடாளுமன்றத்திலும் பிளவுபட உள்ளது. பால்தாக்கரே பெரும் முயற்சியோடு கட்டமைத்த சிவ சேனா கட்சி இரண்டாக உடைந்துள்ளது

மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு: அக்னிபாத், ஜிஎஸ்டி குறித்து காங். எம்.பி்கள் அமளி

சிவசேனா கட்சியின் மூத்த எம்.பி. ஒருவர் கூறுகையில் “ சிவ சேனா கட்சியிலிருக்கும் 18 எம்.பி.க்களில் 12 பேர், தனியாகப் பிரிந்து, தங்களை தனியாக அங்கீகரிக்குமாறு முறைப்படியான கடிதத்தை ஓம் பிர்லாவிடம் அளிக்க உள்ளனர்” எனத் தெரிவித்தார்

ஆனால், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சிவ சேனா எம்.பி. வினாயக் ராவத் மக்களவைத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் “ சிவசேனா கட்சி என்னைத்தான் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நியமித்தது. ஆதலால், தனிக்குழுவை செயல்பட அனுமதிக்கக்கூடாது. எம்.பி.க்கள் யாரேனும் தனியாகவோ, அல்லது குழுவாகவோ செயல்படுவதையும் அங்கீகரிக்கக்கூடாது, சிலர் தங்களை கொறடா என தவறாகக் கூறி வருகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நடந்த தேசிய நிர்வாகக்குழுக் கூட்டத்தில்,சிவசேனா எம்.பி.க்கள் சிலர் காணொலி வாயிலாக பங்கேற்றனர்

ராம் நாத் கோவிந்த் எவ்வழியோ முர்முவும் அவ்வழியே... பழங்குடிகளுக்கு ஒரு நன்மையும் ஏற்படாது... ரவிக்குமார் MP.

சிவசேனா கட்சியின் 18 எம்.பிக்களில் 12 பேர் தங்களை தனிக் குழுவாக செயல்பட அனுமதிக்குமாறு இன்று மக்களவை சபாநாயகரைச் சந்தித்துமனு அளிக்கஉள்ளனர். 

சிவ சேனா எம்.பி. ஒருவர் கூறுகையில் “ நாங்கள் சிவ சேனா கட்சியை உடைக்கவில்லை.தற்போதுள்ள தலைவர் ராகுல் ஷிவாலே மீது நம்பிக்கையில்லாததால், தனியாகச் செயல்பட அனுமதிக்குமாறு கோருகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

மகாரஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார். அங்கு சிவசேனா கட்சியின் போட்டி எம்.பி.க்கள் அவரைச் சந்தித்துப் பேச உள்ளனர். 

சிவசேனா கட்சியின் செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில் “ மகாராஷ்டிராவை 3 துண்டுகளாக பாஜக முயல்கிறது. சிவசேனா கட்சியும் காவியின் சதித்திட்டத்தில் சிக்கிவிட்டது. 
சிவசேனா கட்சியை உடைக்க திட்டமிட்டுள்ளார்கள். நாங்கள் எங்கள் கட்சிக்காகவும், சின்னத்துக்காகவும் போராடத் தயாராகிவிட்டோம். ஆனால், சிவசேனா தொண்டர்கள்,  கட்சி மாறிய எம்எல்ஏக்கள், எம்பிக்களை தேர்தலில் வெல்லவைக்க மாட்டார்கள். 

ஷிண்டே நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற சிவ சேனா எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 6 எம்.பி.க்கள் எங்களுடன் இருக்கும்போது மற்ற எம்.பி.க்கள் எவ்வாறு தனியாகச் செயல்பட முடியும். என்ன நடந்தாலும் இ்ப்போது நடப்புத காமெடி எக்ஸ்பிரஸ் சீசன்-2. சிவசேனா கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி, கட்சியை உடைக்க முடியாது. போட்டி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது” எனத் தெரிவித்தார்

click me!