மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள்: முன்னிலை நிலவரம் என்ன?

By SG Balan  |  First Published Nov 23, 2024, 9:24 AM IST

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் இரண்டு மாநிலங்களிலும் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது.


மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் இரண்டு மாநிலங்களிலும் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்:

Tap to resize

Latest Videos

பாஜக தலைமையிலான மஹாயுதி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் போட்டியிடும் அதே வேளையில், மஹாயுதி ஆட்சியை அகற்ற மஹா விகாஸ் அகாதி முயல்கிறது. மஹாயுதி கூட்டணியில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை உள்ளன. மஹா விகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (UBT), மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (NCP-SP) ஆகியவை அடங்கும்.

மகாராஷ்டிராவில் முன்னணி யார்?

மகாராஷ்டிராவில் 288 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி முன்னணியில் உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாதி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

சமீபத்திய முன்னணி நிலவரம்:

பாஜக கூட்டணி (மகாயுதி) - 220

காங். கூட்டணி (மகா விகாஸ் அகாதி) - 50

மற்றவை - 18

ராகுலை முந்துவாரா பிரியங்கா காந்தி? வயநாடு இடைத்தேர்தல் முடிவுகளில் முந்துவது யார்?

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்:

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில், ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்க முயல்கிறது. ஜேஎம்எம் 41 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தலில் போட்டியிட்டது. காங்கிரஸ் 30, ராஷ்ட்ரிய ஜனதா தளம் 6, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) 4 இடங்களில் போட்டியிட்டன.

அதே நேரத்தில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றவதில் தீவிரமாக உள்ளது. பாஜக 68 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான ஏஜேஎஸ்யு 10 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 2, லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 1 இடங்களிலும்  களம் கண்டன.

ஜார்க்கண்டில் யார் முன்னணி?

ஜார்க்கண்ட் மாநிலம் 81 சட்டமன்றத் தொகுதிகள் கொண்டது. பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் ஆளும் ஜேஎம்எம் கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது.

சமீபத்திய முன்னணி நிலவரம்:

ஜே.எம்.எம். கூட்டணி - 49

பாஜக கூட்டணி - 30

மற்றவை - 2

உச்சக்கட்டத்தில் மோதும் பாஜக Vs ஜேஎம்எம்; ஜார்க்கண்ட்டில் ஏற்பட்ட 'திடீர்' மாற்றம்

click me!