யப்பா… அக்கப்போர் தாங்க முடியல…? மோடி வந்தா தான் தடுப்பூசி போட்டுக்குவேன்… அடம்பிடித்த கிராமவாசி

By manimegalai aFirst Published Sep 28, 2021, 7:39 AM IST
Highlights

பிரதமர் மோடி இங்கு வந்தால் தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்குவேன் என்று கிராமவாசி ஒருவர் அடம்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

போபால்: பிரதமர் மோடி இங்கு வந்தால் தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்குவேன் என்று கிராமவாசி ஒருவர் அடம்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொரோனாவை ஒருவழி பண்ணும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் அசுர வேகத்தில் இருக்கின்றன. அனைத்து மாநிலங்களும் கோவிட் தடுப்பூசி போடும் பணியில் மும்முரமாக உள்ளன. ஆனாலும் தடுப்பூசி போதிய அளவுக்கு கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டே வந்தாலும் சில பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் சில காமெடிகளும் அரங்கேறி இருக்கின்றன.

ஒரே பெண்ணுக்கு ஒரே நாளில் 2 தடுப்பூசிகள் குத்தியது, தடுப்பூசி குத்தியது போன்ற காட்சிகள் என டிசைன்,டிசைனாக செய்திகள் வெளி வந்தன. இப்போது அதை எல்லாம் தூக்கி அக்கட வைக்கும் அளவுக்கு மத்திய பிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

பிரதமர் மோடி வந்தால் தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்குவேன் என்று ஒரு கிராமவாசி அடம்பிடித்த சம்பவம் தான் இப்போது மத்திய பிரதேசம் முழுக்க பேசப்படுகிறது.

மாநிலத்தின் தலைநகர் போபாலில் இருந்து 130 கிமீ தொலைவில் உள்ள ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் தான் இந்த அக்கப்போர் நடந்திருக்கிறது. கிகார்வாஸ் என்ற அந்த கிராமத்தில் உள்ள நபர் பண்ணிய அட்ராசிட்டி இப்போது வெளிவந்திருக்கிறது. அங்கு கொரோனா தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்திருக்கிறது.

அப்போது கிராமத்தில் உள்ள ஒருவர் என்னை யார் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று சொன்னது? அவரை வரச் சொல்லுங்க, பார்க்கணும் என்று கூறி இருக்கிறார். உயரதிகாரி ஒருவரின் பெயரை சொல்லி விஷயத்தை சொன்னவுடன் கிராமவாசி அளித்த பதில் தான் அட்டகாசம்.

அந்த அதிகாரியை வர சொல்லுங்க… பிரதமருக்கு போன் போட சொல்லுங்க அப்ப தான் ஊசி போட்டுக்குவேன் என்று அடம்பிடித்து இருக்கிறார். அதிகாரிகள் தரப்பில் எவ்வளவோ முயன்றும் அந்த மனுசரை சமாதானப்படுத்த முடியவில்லை.

கிர்காஸ் கிராமத்தில் அந்த கிராமவாசி மற்றும் அவரது மனைவி மட்டும் தான் இன்னமும் தடுப்பூசி போடவில்லை. மற்ற அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திவிட்டோம், எப்படியும் அவர்கள் 2 பேருக்கும் தடுப்பூசி போட்டுவிடுவோம் என்று அதிகாரிகள் நம்பிக்கையுடன் கூறி சென்றிருக்கின்றனர். ஆனாலும் இந்த கிராமவாசியுன் அட்ராசிட்டி தான் இப்போது மத்திய பிரதேசம் முழுக்க பெரும் பேச்சாக இருக்கிறது.

click me!