பதவியேற்றதும் விவசாய கடன்கள் தள்ளுபடி..! முதல் கையெழுத்தில் முத்திரைப்பதித்த முதல்வர்

Published : Dec 17, 2018, 05:29 PM ISTUpdated : Dec 17, 2018, 05:34 PM IST
பதவியேற்றதும் விவசாய கடன்கள் தள்ளுபடி..! முதல் கையெழுத்தில் முத்திரைப்பதித்த முதல்வர்

சுருக்கம்

மத்தியபிரதேச மாநிலத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக முதல்வர் கமல்நாத் அறிவித்துள்ளார். முதல்வராக பதவியேற்றவுடன் விவசாயக் கடன் தள்ளுபடிக்கான கோப்பில் கமல்நாத் முதல் கையெழுத்திட்டார்.

மத்தியபிரதேச மாநிலத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக முதல்வர் கமல்நாத் அறிவித்துள்ளார். முதல்வராக பதவியேற்றவுடன் விவசாயக் கடன் தள்ளுபடிக்கான கோப்பில் கமல்நாத் முதல் கையெழுத்திட்டார். 

சமீபத்தில் நடந்த மத்தியபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 114 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. பாஜகவின் 15 ஆண்டுகளாக ஆட்சிக்கு முடிவு கட்டியது.  பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி மற்றும் சுயேச்சைகள் என மேலும் 7 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த 13–ம் தேதி, காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் ஆனந்திபென் படேல் அழைப்பு விடுத்தார். 

இந்நிலையில், புதிய முதலமைச்சராக கமல்நாத் இன்று பதவி ஏற்றக்கொண்டார். போபாலில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் கமல்நாத்துக்கு ஆளுநர் ஆனந்திபென் படேல் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக முதல்வர் கமல்நாத் அறிவித்துள்ளார்.

முதல்வர் இருக்கையில் அமர்ந்ததும் தனது முதல் கையெழுத்தை விவசாயி தள்ளுபடி செய்வதாக கூறி முத்திரைப்பதித்துள்ளார்.விவசாயிகளின் ரூ. 2 லட்சம் வரையிலான கடன்களை தள்ளுபடி செய்ய முதல்வர் கமல்நாத் உத்தரவிட்டுள்ளார். இதனால் அம்மாநில விசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

ஆர்எஸ்எஸ் அமைப்பை பார்த்து கத்துக்கோங்க ராகுல் காந்தி.. காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் ட்வீட்!
விர்ர்ர்ரென உயரும் தங்கத்தின் விலை..! உலகளவில் தாறுமாறாக உயர இதுதான் காரணம்..! எப்போது குறையும் தெரியுமா..?