பள்ளி வேனில் குழந்தைகளை வைத்துக்கொண்டு டிரைவர் செய்த படுகேவலமான செயல்...!

Published : Sep 27, 2018, 01:28 PM IST
பள்ளி வேனில் குழந்தைகளை வைத்துக்கொண்டு டிரைவர் செய்த படுகேவலமான செயல்...!

சுருக்கம்

பள்ளிக் குழந்தைகளை அழைத்து வரும் வேன் ஓட்டுனர் ஒருவர், சாலையில் வேனை நிறுத்திவிட்டு மது அருந்த சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக் குழந்தைகளை அழைத்து வரும் வேன் ஓட்டுனர் ஒருவர், சாலையில் வேனை நிறுத்திவிட்டு மது அருந்த சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

லக்னோவில் சரஸ்வதி கியான் மந்திர் என்ற தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியிலிருந்து மாணவர்களை அழைத்து செல்லும் வேன் டிரைவர் ஒருவர் மலையில் பள்ளி முடிந்தவுடன் குழந்தைகளை வேனில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது செல்லும் பாதையில் தெருவோரத்தில் திடீரென வேனை நியூட்ரல் கியரில் நிறுத்திவிட்டு, அருகில் இருக்கும் ஒயின் ஷாப்பிற்கு சென்றுள்ளார். 

இந்நிலையில் இந்த சாலையில் வழியே சென்ற நபர் ஒருவர், குழந்தைகளுடன் பள்ளி வேன் தனியாக இருப்பதை கண்டு உள்ளே இருந்த குழந்தைகளிடம் டிரைவர் எங்கே என்று கேட்டுள்ளார். குழந்தைகள் டிரைவர் சென்ற சாலையை காட்டியுள்ளனர். அதன் பின் அந்த நபர் உடனடியாக அருகிலிருந்த ஒயின் ஷாப்பிற்கு சென்று, குழந்தைகள் இருக்கிற வேனை நியூட்ரலில் போட்டுவிட்டு வந்த டிரைவர் யார் என கோபமாக கத்தியுள்ளார். 

இதைக் கேட்டு அங்கு இருந்த டிரைவர் பதறிபோய் உடனடியாக வேன் இருக்கும் பகுதியைக் நோக்கி ஓடுகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!