பீகார் துணை முதல்வருக்கு 44 ஆயிரம் ‘லவ் லெட்டர்ஸ்’!! - வாட்ஸ்அப் மூலம் பெண்கள் ‘கெஞ்சல்’

First Published Oct 22, 2016, 4:28 AM IST
Highlights


பீகார் துணை முதல்வரும், லாலு பிரசாத் யாதவின் இளைய மகனுமான தேஜஸ்வி யாதவுக்கு ‘வாட்ஸ்அப்’ மூலம், 44 ஆயிரம் பெண்கள் காதல் கடிதம் எழுதி திருமணம் செய்ய கேட்டுள்ளனர். 

பொதுமக்கள் தங்கள் குறைகளை ‘வாட்ஸ்அப்’ மூலம் தெரிவிக்கலாம் என துணை முதல்வர் அளித்த எண்ணில், பெண்கள் இப்படி காதல் கடிதங்களை எழுதியுள்ளனர். ஒட்டுமொத்தமாக 47 ஆயிரம் வாட்ஸ்அப் செய்திகளில் வெறும் 3 ஆயிரம் மட்டுமே பொதுமக்களின் குறைகளாக இருந்தன. மற்ற 44 ஆயிரம் கடிதங்களும், மனுக்களும் காதல் கடிதங்களாகவே இருந்துள்ளன. 

இது குறித்து பீகார் மாநில மக்கள் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ பிரியா, அனுபமா, மணிஷா, அனுஷா, காஞ்சனா, தேவிகா என பெயரில் 44 ஆயிரம் காதல் கடிதங்கள் துணை முதல்வருக்குவாட்ஸ் அப் எண்ணில் வந்துள்ளன. 47 ஆயிரம் மனுக்களில் 3 ஆயிரம் மட்டுமே பொதுமக்களின் குறைகளைக் குறிக்கும் மனுக்களாக இருக்கிறது. பெண்கள் அனுப்பிய கடிதத்தில் தங்களின் சாதி, நிறம், உடலமைப்பு, உயரம், எடை, படிப்பு ஆகியவை குறித்தும், தன்னை திருமணம் செய்து கொள்வீர்களா? எனக் கேட்டும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மக்கள் தங்கள்குறைகளை தெரிவிக்க கொடுத்த வாட்ஸ்அப்எண்ணை பெண்கள் தவறாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்'' என்று தெரிவித்தார். 

இது குறித்து துணை முதல்வர் தேஜ்ஸ்வி யாதவிடம் கேட்டபோது அவர் சிரித்துத் கொண்டே, “ இது குறித்து நான் என்ன சொல்வது என தெரியவில்லை. இதுபோன்ற செய்திகள் என்னை மிகவும் தர்மசங்கடத்தில் ஆழ்த்துகின்றன. ஆனால், நான் என் வீட்டில் பார்த்து கொடுக்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்வேன்'' என்றார். 

click me!