
புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து எதிர்கட்சியினர் குளிர்கால கூட்ட தொடர் தொடங்கிய நாள் முதல் தொடர் அமளியில் ஈடுட்பட்டு வருகின்றனர்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை கண்டித்து எதிர்கட்சியினர் நேற்று நாடாளுமன்ற வளாகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இன்று மக்களவை தொடங்கியதும் எதிர்கட்சியினர் ரூபாய் நோட்டு விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அப்போது, அவையின் மையப்பகுதிக்கு வந்த எதிர்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. அக்ஷய் யாதவ் தனது கையில் வைத்திருந்த பேப்பரை கிழித்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மீது வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து அவையில் கூச்சல் குழப்பம் நிலவியதால் பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அவை தொடங்கியதும் தொடர்ந்து எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும்ம் ஒத்திவைக்கப்பட்டது.