காங்கிரஸ் - சமாஜ்வாடி கூட்டணி: காங்கிரசுக்கு 17; சமாஜ்வாடிக்கு 63; சிக்னல் கொடுத்த அகிலேஷ் யாதவ்!!

By Asianet Tamil  |  First Published Feb 21, 2024, 4:12 PM IST

வரும் மக்களவை தேர்தலில் காங்கிரசுடனான கூட்டணியை சமாஜ்வாதி கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் உறுதி செய்துள்ளா


வரும் மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதிக் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று கூறப்பட்டு வந்தது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்தது வந்தது. இந்தியா கூட்டணியில் இந்த இரண்டு கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையி கடந்த இரண்டு நாட்களாக பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், கூட்டணி உறுதியாகாது என்றும் செய்தி வெளியாகி வந்தது. 

இதற்கிடையில் இன்று பேட்டி அளித்து இருக்கும் அகிலேஷ் யாதவ், ''காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் இடையே தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதில் எந்தப் பிரச்சனைகளும் இல்லை. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்போம். பாஜக தோற்கடிக்கப்படும். வரும் மக்களவை தேர்தலில் அதிகபட்ச தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுவோம்'' என்று தெரிவித்துள்ளார். மேலும் அனைத்தும் நன்றாக சென்று கொண்டு இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு பிரிவு கலைப்பு: அகிலேஷ் யாதவ் உத்தரவு!

இன்று மாலைக்குள் சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடுகள் தொடர்பான முடிவுகள் வெளியாகும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் கூறி வருகின்றன. வாரணாசி தொகுதியை இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுக்க அகிலேஷ் யாதவ் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தொகுதியில் சமாஜ்வாதி போட்டியிடும் என்று அந்தக் கட்சி ஏற்கனவே அறிவித்துள்ளது. 

சீதாபூர் தொகுதிக்கு பதிலாக ஹத்ராஸ் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு அகிலேஷ் விட்டுக் கொடுப்பார் என்று தெரிய வந்துள்ளது. இத்துடன் புலந்த்சர் அல்லது மதுராவில் சமாஜ்வாதி போட்டியிலாம். காங்கிரஸ் கட்சிக்கு ஷ்ரவஸ்தி தொகுதி ஒதுக்கப்படலாம்.  

ஜாதி அடிப்படையில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் முன்பு பெற்று இருக்கும் வாக்கு வங்கிகளின் அடிப்படையில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது. 

காங்கிரஸுக்கு 17 தொகுதிகளை ஒதுக்கும் சமாஜ்வாதி: இதுதான் கடைசி ஆஃபர்!

மூன்றாவது கட்டமாக தனது வேட்பாளர்களின் பெயர் பட்டியலை நேற்று அகிலேஷ் யாதவ் வெளியிட்ட பின்னர் இன்று காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை அகிலேஷ் உறுதி செய்து இருக்கிறார். புதவ்ன் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரான சிவ்பால் யாதவ் போட்டியிடுகிறார். அகிலேஷ் யாதவின் உறவினரான சிவ்பால் யாதவ் எட்டா மாவட்டத்தில் இருக்கும் ஜஸ்வந்த்நகர் தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். எம்எல்சியாக இருந்த சுவாமி பிரசாத மவுரியாவும் தனது பதவியை ராஜினாமா செய்து கட்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறி இருந்தார்.

முன்னதாக தொகுதி பங்கீடு குறித்து பேட்டியளித்து இருந்த சமாஜ்வாடி கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி, ''காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகளை நாங்கள் ஒதுக்கி இருக்கிறோம். தற்போதும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. அவர்கள் எங்களிடம் தொகுதி பட்டியல் கொடுத்துள்ளனர். நாங்களும் பகிர்ந்து கொள்வோம். தொகுதி பங்கீடு முடிந்த பின்னர் ராகுல் காந்தியின் யாத்திராவில் கலந்து கொள்வோம்'' என்று தெரிவித்து இருந்தார். தாங்கள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ நியாய யாத்திராவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று கடந்த திங்கள் கிழமை அகிலேஷ் யாதவ் உறுதிபடுத்தி இருந்தார். 

கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகளும், சமாஜ்வாடிக் கட்சிக்கு 63 தொகுதிகளும் உடன்பாடு எட்டி இருப்பதாக உறுதியான தகவல்களும் வெளியாகி வருகின்றன.

click me!