ஏழை தாயின் மகனுக்கு எக்கச்சக்கமாய் வியர்ப்பது ஏன்..? கிலி மோடியும், கில்லி லேடிகளும்! தெறிக்கத் தெறிக்க சூடேறும் நாடாளுமன்ற தேர்தல்..!

By Vishnu PriyaFirst Published Feb 5, 2019, 4:35 PM IST
Highlights

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வைபரேஷன் துவங்கிவிட்ட நிலையில், சர்வேக்கள் தரும் முடிவுகளைப் பார்த்து தலைசுற்றி நிற்கிறார் மோடி.

’எனக்கு பயப்பட தெரியாது!’- முரட்டு மெஜாரியுடன் ஆட்சியிலமரந்த சில நாட்களில் தன் கட்சியின் பொதுக்கூட்டமொன்றில் மோடி முழங்கிய வார்த்தை இது.  ஆனால் ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்தானே? இதோ 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வைபரேஷன் துவங்கிவிட்ட நிலையில், சர்வேக்கள் தரும் முடிவுகளைப் பார்த்து தலைசுற்றி நிற்கிறார் மோடி! 

மோடிக்கு எதிராக கிளர்ந்து எழுந்திருக்கும் எதிர்கட்சிகளின் மெகா கூட்டணி அவருக்கு கிலியை கிளப்பியிருக்கிறது. அதிலும், லேடி தலைவர்கள்தான் மோடியை அதிரவிட்டிருக்கிறார்கள். கடந்த முறை தமிழகத்தில் மோடிக்கும், ஜெயலலிதாவுக்கும் மிகப்பெரிய போட்டி இருந்தது. அதை ‘மோடியா? லேடியா!’ என்று விமர்சித்தன ஊடகங்கள். பெண் சிங்கம்போல் சீறிப்பாய்ந்து வென்றார் ஜெயலலிதா. ஆனால் இந்த ஐந்து வருட காலத்தினுள் எவ்வளவோ சூழல்கள் மாறிவிட்டன. 

இன்று ஜெயலலிதா இல்லாத நிலையில் அவரது இயக்கத்தை இழுத்துப் பிடித்து கூட்டாளியாக்கிக் கொண்டு தேர்தலில் நிற்க எத்தனிக்கிறது பி.ஜே.பி! என்கிறார்கள். இந்த தேர்தல் மோடிக்கும் மிகப்பெரிய சவால்தான். அதிலும் அவருக்கு எதிராக வரிசை கட்டி நிற்கும் பெண் தலைவர்கள்தான் மிரட்டுகிறார்கள். மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமூல் நடவடிக்கையில் இருந்து காப்பாற்றுவதற்காக முதல்வரென்றும் யோசிக்காமல் தர்ணாவில் அவர் உடார்ந்தது, மோடிக்கு எதிரான உச்சக்கட்ட அரசியல். 

பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி ஒரு புறம் மோடிக்கு கெட்ட சொப்பனமாகி இருக்கிறார். உத்திரபிரதேசத்தில் இவரும் அகிலேஷ் யாதவும்  கூட்டு போட்டு ஓட ஓட விரட்டுகின்றனர் மோடியின் ஆதரவு அலையை.  சட்டசைபையை தொடர்ந்து தவறவிட்டிருக்கும் மாயாவதி மீண்டெழ வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அவரது சீற்றம் மிக அதிகமாகவே இருக்கிறது. 

தமிழகத்தை பொறுத்தவரையில் தி.மு.க. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பி.ஜே.பி.யை பிய்த்து தின்கிறது. அக்கட்சியின் தலைவரின் தங்கையும், தி.மு.க. மகளிரணி மாநில செயலாளருமான கனிமொழியின் நாடாளுமன்ற மற்றும் அரசியல் மேடை பேச்சுக்கள் ஒவ்வொன்றும் பி.ஜே.பி.யை புரட்டிப் போட்டு வெளுக்கின்றன. ஆக இவரும் மோடிக்கு கிலியே. 

இவர்கள் எல்லோரையும் தாண்டி சாந்த சொரூபியாகவும், அரசியல் காட்டாற்றில் புதிதாய் கால் நனைப்பதற்காக கையில் ரோஜாக்களுடன் வந்து நிற்கும் பிரியங்கா காந்தியோ மோடியை  மிரளவே வைக்கிறார். ராகுலால் மிக சரியான நேரத்தில் களமிறக்கிவிடப்பட்டிருக்கும் பிரியங்காவுக்கான ஆதரவு பி.ஜே.பி.யை பதறவிட்டிருக்கிறது.

காங்கிரஸின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் பிரியங்காதான், மோடிக்கு எதிராக படைதிரட்டி நிற்கும் பெண்களில் மிக வீரியமானவராய் பார்க்கப்படுகிறார். இப்படியாக நான்கு லேடிகளின் நான்கு முனை தாக்குதலால், தாடியை தடவி நிற்கும் மோடியைப் பார்த்து, ‘ஏழை தாயின் மகனுக்கு கண்ணில் ஏன் வேர்க்குது?!’ என்று கிண்டலடிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

click me!