
கரட்பூர் தொகுதி குடாநகரி ஆதர்ஷா வித்யாலயா அருகே 11 கிலோ வோல்ட் மின்கம்பியில், மின்னல் தாக்கியதால், பள்ளி விடுதியின் அறையில் இருந்த மாணவர்களும் அந்த அதிர்ச்சியை பலமாக உணர்ந்துள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றது.
காயமடைந்த மாணவர்களில் இருவர் சிறுவர்கள் என்றும், மற்றும் 14 பேரும் சிறுமிகள் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்கள் அனைவரும் அந்த பள்ளியில் 6 மற்றும் 7ம் வகுப்பு படித்துவருபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காயமடைந்த மாணவர்கள் உடனடியாக சமூக நல மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும், தற்போது, அவர்கள் அனைவரும் பூரண நலத்துடன் இருப்பதாகவும் அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பிரசாந்த் குமார் ஜெனா தெரிவித்தார்.
PM Modi VS Rahul Gandhi : பிரதமர் நரேந்திர மோடி VS ராகுல் காந்தி: சமூக ஊடகங்களின் கிங் யார்?
ஒடிசாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமானது முதல் இடியுடன் கூடிய அதிகனத்த மழை வரை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக ஒடிசா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தற்போது மழைகாலம் துவங்கியுள்ளது.
ஆகவே மக்கள் வெளியில் செல்லும்பொது மிகவும் கவனத்துடன் செல்லுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். கடந்த ஒரு வார காலமாகவே இந்திய அளவில் பல மாநிலங்களில் பரவலாக நல்ல மழை பேயடித்து வருகின்றது. இந்நிலையில் ஒடிசாவில் பள்ளி மாணவர்கள் மின்னலால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எங்கும் ரத்தம், கொலை, கற்பழிப்பு.. மணிப்பூர் வன்முறை விவகாரம்: பிரதமரை வெளுத்த ராகுல் காந்தி