இந்தோனேஷியா அதிபரின் இந்தியப் பயணத்தின்போது, ஷாருக்கான் பட பாடலை இந்தோனேசிய பிரதிநிதிகள் பாடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்தோனேஷியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோ குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். டெல்லி வந்த அவருக்கு அதிபர் திரௌபதி முர்மு சனிக்கிழமை இரவு விருந்து அளித்தார். இந்தோனேஷியப் பிரதிநிதிகள் 'Kuch Kuch Hota Hai' பாடலைப் பாடியது அனைவரையும் கவர்ந்தது. இருநாட்டு உறவு நெருங்கி வருவதற்கான அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது. 'தும் பாஸ் ஆயே, யூ முஸ்குராயே' என்ற வரிகள் இருநாடுகளின் நெருக்கத்தை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
பாகிஸ்தான் பயணம் ரத்து
இந்தியப் பயணத்துக்குப் பின் பாகிஸ்தானுக்கும் செல்லவிருந்த இந்தோனேஷிய அதிபர், இந்தியாவின் அழுத்தத்தால் அந்தப் பயணத்தை ரத்து செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய செல்வாக்குமிக்க நாடான இந்தோனேஷியாவுடனான வரலாற்று, கலாச்சார, பொருளாதார உறவுகளை மேம்படுத்த இந்தப் பயணம் உதவும். இருநாடுகளுக்கும் இடையேயான உத்திசார் கூட்டுறவுக்கு இது சிறந்த எடுத்துக்காட்டு. அதிபர் பிரபோவோவின் இந்தியப் பயணம் இருதரப்பு உறவுகளுக்குப் புதிய பரிமாணத்தைத் தரும். இந்தியாவின் 'கிழக்கு நோக்கு கொள்கை'யை வலுப்படுத்தவும் இது உதவும்.
இதையும் படியுங்கள்... 76வது குடியரசு தினம்: டெல்லியில் கோலாகல கொண்டாட்டம்
Bollywood’s power to unite shines again! The Indonesian delegation singing Kuch Kuch Hota Hai is such a heartwarming tribute. Truly honored! ❤️🌏 https://t.co/Bg0WfProvn
— Kajol (@itsKajolD)இந்தியா-இந்தோனேஷியா இடையே வர்த்தக உறவுகள் ஏற்கெனவே வலுவாக உள்ளன. இந்தப் பயணத்தின்போது புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்படலாம். இந்தியா, இந்தோனேஷியாவிலிருந்து நிலக்கரி, பாமாயில், கனிமங்களை இறக்குமதி செய்கிறது. மருந்துகள், ஜவுளி, தகவல் தொழில்நுட்ப சேவைகளை இந்தியா ஏற்றுமதி செய்கிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது அவசியம். கூட்டுப் பயிற்சிகள் மற்றும் உளவுத்துறை தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்த இந்தப் பயணம் உதவும்.
பிரதமர் மோடி சந்திப்பு
இந்தியா மற்றும் இந்தோனேஷியா இரண்டு நாடுகளிலும் இந்து மற்றும் புத்த மதங்களின் செல்வாக்கு அதிகம். இதனால் சுற்றுலா மற்றும் கலாச்சாரப் பரிமாற்றத் திட்டங்கள் அறிவிக்கப்படலாம். குடியரசு தின விழாவில் இந்தோனேஷிய அதிபரை அழைத்தது, இந்தியா தனது பிராந்திய மற்றும் உலகளாவிய நாடுகளுடன் வலுவான உறவுகளை ஏற்படுத்த உறுதிபூண்டுள்ளதைக் காட்டுகிறது. இருதரப்பு வர்த்தகத்தை 50 பில்லியன் டாலராக உயர்த்த இந்தப் பயணத்தின்போது இலக்கு நிர்ணயிக்கப்படலாம். தென்சீனக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் கூட்டு ரோந்து மற்றும் உத்திசார் கூட்டுறவை மேம்படுத்த இருநாட்டு உறவு வலுப்படும். சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் அதிபர் பிரபோவோவைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்துப் பேசினார்.
இந்தியா முதல் குடியரசு தின விழாவைக் கொண்டாடியபோது, இந்தோனேஷியாவே சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டது. குடியரசு தின அணிவகுப்பில் இந்தோனேஷியாவின் 190 பேர் கொண்ட ராணுவ இசைக்குழுவும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ஒரே நாடு ஒரே தேர்தல் தொலைநோக்கு பார்வையின் முயற்சி: குடியரசு தின உரையில் திரௌபதி முர்மு பேச்சு!