கணவன் மனைவிக்கு இடையே கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது!! ஆணவ கொலையின் அஸ்திவாரத்தை தகர்த்த உச்சநீதிமன்றம்

First Published Mar 27, 2018, 11:05 AM IST
Highlights
khap panchayat is illegal said supreme court


கணவன் மனைவிக்கு இடையே கட்டப்பஞ்சாயத்து செய்வது சட்டவிரோதம் என்றும் அதை தடுக்க மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நாடு முழுவதும் ஆணவக்கொலைகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக வடமாநிலங்களில் கணவன் மனைவிக்கு இடையே கட்டப்பஞ்சாயத்து செய்வதும் ஆணவ கொலைகளும் அதிகமாக அரங்கேறுகின்றன.

கணவன் மனைவிக்கு இடையே மூன்றாவது நபர் கட்டப்பஞ்சாயத்து செய்வதுதான் ஆணவக்கொலைக்கு வழிவகுக்கிறது. அதனால் கணவன் மனைவிக்கு இடையேயான கட்டப்பஞ்சாயத்தை தடுக்க கோரி சக்தி வாஹினி என்ற தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கணவன் மனைவிக்கு இடையே மூன்றாவது நபர் புகுந்து கட்டப்பஞ்சாயத்து செய்வது சட்டவிரோதம். அதில் உள்ள பிரச்னைகளை ஆராய்ந்து அதைத்தடுக்க மாநில அரசுகளால் சட்டம் இயற்ற முடியும். எனவே கணவன் மனைவிக்கு இடையே மூன்றாவது நபர் கட்டப்பஞ்சாயத்து செய்வதை தடுக்கும் வகையில் மாநில அரசுகள் சட்டமியற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 
 

click me!