
திரையரங்குகளில் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இருப்புத்திரை படம் பாணியில் மொபைலில் இருந்து மர்ம நபர்கள் நமது வங்கி கணக்கில் இருந்து பணத்தை நூதன முறையில் எடுத்துக்கொள்ளும் நிலை அரங்கேறியுள்ளது. மொபைல் போனுக்கு சர்வதேச எண்களில் இருந்து மிஸ்டு கால் வந்தால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என கேரள போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.