“நிபா வைரஸ்” நோயாளிக்கு சிகிச்சையளித்த நர்ஸ் பலி! வைரஸ் பரவாமல் இருக்க உறவினர்களுக்கு காட்டாமல் உடலை எரித்த மருத்துவமனை!   

 
Published : May 22, 2018, 05:09 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
“நிபா வைரஸ்” நோயாளிக்கு சிகிச்சையளித்த நர்ஸ் பலி! வைரஸ் பரவாமல் இருக்க உறவினர்களுக்கு காட்டாமல் உடலை எரித்த மருத்துவமனை!   

சுருக்கம்

Kerala Nurse Died After Treating Nipah Patient Left Heartbreaking Note

கேரளாவையே உலுக்கு எடுக்கும் வவ்வால் மூலம் பரவக்கூடிய “நிபா வைரஸ்” தாக்கிய நோயாளிக்கு சிகிச்சையளித்து வந்த நர்ஸ் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வைரஸ் பரவாமல் உடனடியாக எரியூட்டப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோழிக்கோட்டில் கேரளாவின் நிஃபா வைரஸ் தாக்கிய முதல் நோயாளிக்கு சிகிச்சையளிக்கும் குழுவில் நர்ஸ் லினி புதுசேரியும் ((Lini Puthusery)) இருந்தார். இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நிஃபா வைரசால் பாதிக்கப்பட்டு தனி வார்டில் வைக்கப்படிருந்த 31 வயது நர்ஸ் லினி, அதன் பிறகு இந்தநோய் விரைவில் பரவுவதால் தனது கணவரையும் 7 வயது மற்றும் 2 வயதுக் குழந்தைகளையும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் அந்த நர்ஸ் உயிரிழந்துள்ளார். மருத்துவமனையிலேயே உயிரிழந்த லினியின் உடல் வைரஸ் பரவாமல் உடனடியாக எரியூட்டப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்க்கு முன்பு மருத்துவமனையின் தனி வார்டில் இருந்தபடி லினி தனது கணவருக்கு எழுதிய கடிதத்தில் தான் தனது இறுதிப் பயணத்தில் இருப்பதாகவும், தன்னால் குடும்பத்தினரை சந்திக்க முடியுமா என தோன்றவில்லை என்று அதில்  குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதில் “தன் குழந்தைகளை சிறப்பாக பார்த்துக்கொள்ளுமாறும், அவர்களை தனியாக விட்டுவிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ள அவர், குழந்தைகளுக்கு தனது அன்பை தெரிவித்துள்ளார்”. இந்தக் மடல் இணையதளத்தில் வெளியாகி பலரின் கண்ணீரை வரவழைத்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!