100% தடுப்பூசி என்ற இலக்கை எட்டியது கேரளா... அறிவித்தது அம்மாநில சுகாதாரத்துறை!!

By Narendran SFirst Published Jan 21, 2022, 3:52 PM IST
Highlights

கேரளாவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் 100 சதவீதம் செலுத்தப்பட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் 100 சதவீதம் செலுத்தப்பட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று காலை வெளியான அறிக்கையின்படி 3.17 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் 28,000த்தை கடந்து அதிகரித்துள்ளது. கேரளாவில் தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த கேரள அரசு முயற்சி செய்துகொண்டிருக்கிறது. கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று மிக அதிகமாகப் பரவி வருகிறது. கேரளாவில் புதிதாக 40 ஆயிரம் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தொற்று பாதிப்பு உறுதியாகும் விகிதம் 37.17 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கொரோனாவால் புதிதாக 49 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வந்தபோதிலும், 3.2 விழுக்காடு அளவுக்கே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.

தடுப்பூசி எடுத்துக்கொண்டதால், பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. அதே நேரம் கேரளாவில் ஒமிக்ரானால் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 54 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 645 ஆக உயர்ந்துள்ளது. தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், அங்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் நாளுக்குநாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவிலேயே கேரள மாநிலத்தில்தான் தினசரி கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.

அதே வேளையில் அங்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் தகுதியான பொதுமக்கள் அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கேரளாவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் 100 சதவீதம் செலுத்தப்பட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். முன்னதாக 18 வயதுக்கு மேற்பட்ட 100 சதவீதம் பேருக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்ட முதல் மாவட்டம் என்ற பெருமையை எர்ணாகுளம் பெற்றுள்ளதாக அம்மாநில தொழில்துறை அமைச்சர் பி ராஜீவ் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!