குமாரசாமி ஆட்சி கவிழ்கிறது..? முகமது கஜினியை போல் விடாமல் படையெடுத்த பாஜக...!

Published : Jul 08, 2019, 01:29 PM ISTUpdated : Jul 08, 2019, 01:32 PM IST
குமாரசாமி ஆட்சி கவிழ்கிறது..? முகமது கஜினியை போல் விடாமல் படையெடுத்த பாஜக...!

சுருக்கம்

கர்நாடகாவில் சுயேச்சை எம்எல்ஏ எச்.நாகேஷ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

கர்நாடகாவில் சுயேச்சை எம்எல்ஏ எச்.நாகேஷ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில், பெரும்பான்மைக்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. காங்கிரசுக்கு, சபாநாயகரையும் சேர்த்து 79 உறுப்பினர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 37 உறுப்பினர்களும் உள்ளனர். இந்த ஆளும் கூட்டணிக்கு 2 சுயேச்சைகளும், ஒரு பகுஜன்சமாஜ் உறுப்பினர் ஆதரவும் இருந்தது. இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த 13 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். 

இதனையடுத்து, முதல்வர் குமாரசாமி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில், அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் பதவி வழங்கப்பட்ட சுயேச்சை எம்.எல்.ஏ.வான நாகேஷ் தனது அமைச்சர் பதவியை இன்று அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து. பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில் புதிய திருப்பமாக கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   குமாரசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதால் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் அமைச்சர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், குமாரசாமி அரசுக்கு நெருக்கடி முற்றியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தின் பாதுகாப்புக்கும், செழிப்புக்கும் இந்தியாவுக்கு நன்றியோடு இருங்கள்..! யூனுஷுக்கு ஷேக் ஹசீனா எச்சரிக்கை.!
ஆபரேஷன் சிந்தூரை தடுக்க பாகிஸ்தானுக்கு அல்லாஹ் வந்து உதவினார்..! இந்தியாவை பலவீனமாகக் காட்டும் அசீம் முனீர்..!