விபத்தில் சிக்கிய மத்திய அமைச்சர் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

Asianet News Tamil  
Published : Dec 24, 2016, 10:24 AM ISTUpdated : Sep 19, 2018, 02:53 AM IST
விபத்தில் சிக்கிய மத்திய அமைச்சர் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

சுருக்கம்

மத்திய ரயில்வே மற்றும் தகவல் துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா, கோரக்பூர் நகர் அருகே நேரிட்ட ஒரு சாலை விபத்தில் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
நேற்று இரவு சுமார் 7 மணியளவில் மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா, உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே உள்ள தப்தி ஆற்றுப் பாலம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே சில பாதசாரிகள் நடந்து சென்றனர்.

அவர்கள் மீது கார் மோமல் இருக்க டிரைவர், காரின் பிரேக்கை திடீரென அழுத்தினார். இதில் பின்னால் வந்த கார் அமைச்சரின் கார் மீது மோதி பயங்கரமாக விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் மனோஜ் சின்ஹாவின் இடது கை எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றனர். பின்னர், மேல் சிசிக்சைக்காக, ரயில்வே மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு மற்றும் அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

EPFO New Rules: PF வாடிக்கையாளர்களுக்கு செம்ம குட் நியூஸ்! வெறும் 3 நாளில் வங்கிக் கணக்கில் பணம்..
Vijay Prashant Kishor: விஜய்க்கு ஆலோசனை கொடுத்த பிரசாந்த் கிஷோர்.. இப்போது பாஜக கோட்டையிலேயே நேரடி களம்!