ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவு; நெருக்கும் அமலாக்கத்துறை; அடுத்த முதல்வர் இவர்தான்!!

By Dhanalakshmi GFirst Published Jan 30, 2024, 1:41 PM IST
Highlights

ஜார்கண்ட் முக்தி மோச்சா கட்சித் தலைவரும், அந்த மாநிலத்தின் முதல்வருமான ஹேமந்த் சோரன் தலைமறைவாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜார்கண்ட் முக்தி மோச்சா கட்சித் தலைவரும், முதல்வருமான ஹேமந்த் சோரனை நில ஊழல் வழக்கில் எந்த நேரத்திலும் அமலாக்கத்துறை கைது செய்யலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அவர் தலைமறைவாகி இருப்பதாக கூறப்படும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளுடன் இணைந்து ஜார்கண்ட் முக்தி மோச்சா ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில் நில ஊழல் வழக்கில் நாளை, புதன்கிழமை அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ள இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதையடுத்து, ஹேமந்த் சோரன் தலைமறைவாகி இருக்கும் நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனைத்து எம்எல்ஏ.க்களையும் முதல்வர் வீட்டில் இன்று கூடுமாறு கட்சி தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தகவலையும் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் ஜெஎம்எம் கட்சி செயலாளரும்,  செய்தி தொடர்பாளருமான வினோத் குமார் சிங் உறுதிபடுத்தியுள்ளார்.

கண் பார்வையை இழந்தாலும் மன உறுதியை இழக்காத ராணுவ வீரர்: ஏ.ஐ.தொழில்நுட்பம் மூலம் சாதனை!

அமலாக்கத்துறைக்கு அனுப்பி இருக்கும் மின்னஞ்சலில், நில ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை முன்பு ஜனவரி 31ஆம் தேதி ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய இணைவதாக ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். இந்த தகவலையடுத்து, ராஞ்சிக்கு ஹேமந்த் சோரன் திரும்புவாரா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு எந்த பதிலையும் அவர் அளிக்கவில்லை. 

அந்த மாநிலத்தின் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''உங்களைப் போலத்தான் ஹேமந்த் வருவார் என்று நான் காத்துக் கொண்டு இருக்கிறேன். சட்டத்திற்கு மேலானாவர்கள் யாரும் இல்லை. சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும். சட்டம், ஒழுங்கை நாம் பாதுக்காக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார். 

முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு 144 தடை உத்தரவை ஆளுநர் மாளிகை மற்றும் அமலாக்கத்துறை அலுவலகம் பிறப்பித்துள்ளது.

பாஜக தலைவர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கு: 15 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!

முதல்வர் ஹேமந்த் சோரன் பாதுகாப்பாக இருப்பதாக கட்சி தலைமை தெரிவித்துள்ளது. அதேசமயம் அமலாக்கத்துறை ஹேமந்த் சோரன் எங்கு இருக்கிறார் எந்த தகவல் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு தனது தனி விமானத்தில் சோரன் சென்றுள்ளார். அங்கு விமான நிலையத்தில் விமானத்தை நிறுத்திச் சென்றுள்ளார். முதல்வருக்கு கீழ் பணி செய்யும் பலரின் தொலைபேசி சுவிட் ஆப் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த பிஎம்டபிள்யூ காரை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. டெல்லியில் இருக்கும் வீட்டிலும் ஹேமந்த் சோரன் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஜார்கண்டில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டு இருக்கும் நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவில் சோரனின் மனைவி கல்பனாவை முதல்வராக்க ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா முயற்சித்து வருகிறது. இதை கட்சியின் எம்பி நிஷிகாந்த் துபே உறுதிபடுத்தியுள்ளார். 

தற்போது வெளியாகி இருக்கும் செய்தியில் ராஞ்சியில் ஹேமந்த் சோரன் இருப்பதாகவும் அவர் முன்னிலையில்தான் மதியம் மூன்று மணிக்கு எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கவிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

click me!