உத்தர பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸை சேர்ந்த 70க்கும் மேற்பட்டோர் ஆன்மிக பயணமாக ஜம்மு காஷ்மீர் ரியாசி மாவட்டத்தில் உள்ள சிவ்கோரி ஆலயத்திற்கு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது.
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். 70 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸை சேர்ந்த 70க்கும் மேற்பட்டோர் ஆன்மிக பயணமாக ஜம்மு காஷ்மீர் ரியாசி மாவட்டத்தில் உள்ள சிவ்கோரி ஆலயத்திற்கு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அப்போது பேருந்து ஜம்மு மாவட்டத்தின் சோகி ஷோரா பெல்டில் உள்ள டாங்கிலி மோர் அருகே வந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர், 150 அடி பள்ளத்தில் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பயணிகள் வலியால் அலறி துடித்தனர். இதனையடுத்து அப்பகுதியில் இருந்த கிராமத்தினர் மற்றும் துணை ராணுவம் மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
மேலும் படுகாயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்மீக சுற்றுலா வந்த இடத்தில் விபத்தில் சிக்கி 22 பேர் பஉயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.