
கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த ஜல்பைகுரி - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலத்தில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு ஜல்பைகுரி - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சனிக்கிழமரை சென்னை நோக்கி வருகிற வழியில் திடீரென தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. ஒடிசா மாநிலத்தின் பலாசோர் மாவட்டத்தில் இருக்கும் சோரோ ரயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்த போது ரயில் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டது.
தண்டவாளத்திற்கு அருகே இருந்த மின்கம்பம் ஒன்றில் மோதி ரயில் தடம் புரண்டது என்று முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் பயணிகள் யாரும் காயம் அடையவில்லை எனக் கூறப்படுகிறது. ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு செய்துவருகின்றனர்.
மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ரயில்வே போலீசார் ந்த விபத்து தொடர்பாக விசாரிக்கத் தொடங்கி உள்ளனர்.
சென்ற 2023ஆம் ஆண்டு ஒடிசாவில் நடைபெற்ற கோர ரயில் விபத்தும் பாலாசோர் மாவட்டத்தில்தான் நடைபெற்றது என்பது நினைவுகூரத்தக்கது.