லேண்டருக்காக ரிஸ்க் எடுக்க துணிந்தது இஸ்ரோ...!! ஆர்பிட்டரை நிலவுக்கு அருகில் கொண்டுவருகிறது இந்தியா...!!

By Asianet TamilFirst Published Sep 9, 2019, 4:20 PM IST
Highlights

00 கிலே மீட்டர் தூர சுற்றுவட்டப்பாதையில் உள்ள ஆர்பிட்டரை, 50 கிலோமீட்டர் நெருக்கத்திற்கு கொண்டு வர இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ஆர்பிட்டரை நிலவிறக்கு மிக அருகில் கொண்டு வருவது என்பது சாதாரணமாக விஷயம் அல்ல, 

விக்ரம் லேண்டரை துல்லியமாக படம்பிடிக்க ஆர்பிட்டரை நிலவிற்கு நெருக்கமாக கொண்டு செல்ல இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஆபத்தான முயற்ச்சி என்றாலும் கூட லேண்டரை ஆராயவதற்கு  ஒரே வழி இதுதான் என்பதால்  இஸ்ரோ இதற்கு துணிந்துள்ளது.

நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன் 2 திட்டத்தின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட லேண்டர் நிலவில் இறங்கும் நேரத்தில் அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனால் சந்திராயன் திட்டத்தில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலையில் விக்ரம் லேண்டர் என்ன ஆனாது என்பது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். வேகமான சென்ற லேண்டர் நிலவில் தரையிறங்கும் போது நிலவின் மேற்பரப்பில் மோதி சுக்குநூறாக சிதறிவிட்டதா அல்லது பத்திரமாக நிலவில் தரை இறங்கிவிட்டதா என்பது தெரியாமல் விஞ்ஞானிகள் தவித்து வந்த நிலையில் நிலவின் சுற்று வட்டப்பதையில் பயணித்து வரும் ஆர்பிட்டர்,  லேண்டர் இருக்குமிடத்தை துல்லியமாக படம்பிடித்து அனுப்பியது. 

இதனால் லேண்டரின் தேடுதல் பணியில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டது. லேண்டர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும் அதிலிருந்து எந்த தகவலும் கிடைக்கப் பெறவில்லை. இந்த நிலையில் இது குறித்து தகவல் வெளியிட்ட இஸ்ரோ தலைவர் சிவன். லேண்டரில் இருந்து சிக்னல் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் லேண்டர் இருக்கும் இடம் தெரிந்தாலும் லேண்டரின் செயல்படும் திறன் எப்படி உள்ளது என்பதை தெரிந்துகொள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கினர் இஸ்ரோ விஞ்ஞானிகள் . லேண்டர் மீண்டும் செயல்படும் நிலையில் உள்ளதா, அதில் இருந்து சிக்னல் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா, லேண்டரின் பாகங்கள் ஏதாவது சேதமடைந்துள்ளதா. சிக்னல் துண்டிக்கப்பட்டதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்தெல்லாம் விரிவாக ஆராய திட்டமிடப்பட்டுள்ளது. 

ஆர்பிட்டரின் உதவியால் மட்டுமே அதை செயல்படுத்த முடியும் என்பதால்,  தற்போது நிலவின் சுற்றுவட்டப்பதையில் உள்ள ஆர்பிட்டரை நிலவிற்கு நெருக்கத்திற்கு கெண்டு வந்து  ஆராய திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது நிலவிற்கு 100 கிலே மீட்டர் தூர சுற்றுவட்டப்பாதையில் உள்ள ஆர்பிட்டரை, 50 கிலோமீட்டர் நெருக்கத்திற்கு கொண்டு வர இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ஆர்பிட்டரை நிலவிறக்கு மிக அருகில் கொண்டு வருவது என்பது சாதாரணமாக விஷயம் அல்ல, தற்போதுள்ள அதன் செயல்பாட்டிலும்  வேகத்திலும் எந்த மாற்றமும் ஏற்படாதவகையில் படிப்படியாக ஆர்பிட்டரை நகர்த்தி வந்து  நிலவுக்கு  அருகில் நிலை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்பிட்டரை நிலவுக்கு நெருக்கமாக கொண்டுவரும் முயற்ச்சி  சந்தியாரன் 2  திட்டத்தின் அடுத்த மைல் கல்லாக கருதப்படுகிறது.
 

click me!