ஞாபக சக்தி”யில் கின்னஸ் சாதனை  படைத்த கேரள பெண்...... சச்சின்  கைகளால் விருது பெற விருப்பமாம்…

First Published Dec 8, 2017, 10:06 PM IST
Highlights
IQ guinness ... kerala young lady


ஒரு நிமிடத்தில் அதிகமான பொருட்களை ஞாபகம் வைத்து, அதை வரிசை மாறாமல் திரும்பிக் கூறுவதில் கேரள பெண் ஒருவர் கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.

கொல்லம் மாவட்டம்,கடக்கல் கிராமத்தைச் சேர்ந்த 28வயதான சாந்தி சத்யன் என்ற பெண் இந்த அபார சாதனையை செய்து அனைவரிடமும் சபாஷ் பெற்றுள்ளார்.

நினைவுதிறன் என்பது அனைவருக்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனால்,அதை எப்படி செயல்படுத்துகிறோம், அதற்காக பயிற்சி எடுக்கிறோம் என்பதைப் பொருத்து அது மேலும் மெருகேருகிறது.

அதைத்தான் 28 வயதான சாந்தி சத்யனும் செய்துள்ளார். சாந்தி சத்யன் தற்போது முதுகலை மனோதத்துவியல் படித்து வருகிறார்.

60 வினாடிகளில் 45 பொருட்களை பார்த்து நினைவில் வைத்த சாந்தி சத்யன்,  அதை எப்படி பார்த்தாரே அந்த வரிசைப்படியே 2 நிமிடங்கள் 57 வினாடிகளில் திருப்பிக் கூறி இந்த சாதனையைச் செய்துள்ளார்.

இதற்கு முன், நேபாளத்தைச் சேர்ந்த அர்பனா சர்மா என்ற பெண், 43 பொருட்களைப் பார்த்து அதை வரிசை மாறாமல் கூறியதே கின்னஸ் சாதனையாக இருந்து. அதை சாந்தி சத்யன் முறயடித்துள்ளார்.

கடக்கல் பஞ்சாயத்து அலுவகத்தின் கூட்ட அரங்கில் இந்த கின்னஸ் சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி கடந்த மே மாதம் 28ந்தேதி நடந்தது. கின்னஸ் அமைப்பு அதிகாரிகள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்ட சாதனையை தற்போது அவர்கள் அங்கீகரித்துள்ளனர்.

இது குறித்து சாந்தி சத்யன் கூறியதாவது-

நம்முடைய நினைவு திறனை மேம்படுத்திக் கொள்ள ஏராளமான அறிவியல் பூர்வமான வழிமுறைகள் உள்ளன. அதில் முக்கியமானது, நீங்கள் பார்த்தவற்றை உருவகம் செய்து கண்முன் கொண்டு வருவதாகும். இது நீண்ட நாட்களுக்கு உங்கள் மூளையின் நினைவகத்தில் நிலைத்து நிற்கும்.

இதற்காக நான் கடந்த 7ஆண்டுகளாக பயிற்சி எடுத்தேன். கின்னஸ் சாதனையை முறியடிப்பதற்காக ஒரு ஆண்டுக்கு முன்பை நான் பயிற்சியில் இறங்கினேன். தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் எனது கணவர் அனித் சூர்யாதான் எனக்கு பயிற்சியாளர்.

நான் எனது பள்ளிநாட்களில் இந்த பயிற்சியை எடுத்திருந்தபோதிலும், எந்தவிதமான போட்டிகளிலும் நான் பங்கேற்றதில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் எனது தோழி எனக்கு ஊக்கமளித்து, இந்த கின்னஸ் சாதனையை முறியடிக்க தூண்டுகோலாக இருந்தார்.

இந்த சாதனையைச் செய்ய பெரும் துணையாக இருந்த எனது கடக்கல் கிராமபஞ்சாயத்து நிர்வாகிகளுக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன்.

இந்த நினைவு திறன் பயிற்சி குறித்தும், நன்மைகள் குறித்தும் பெரும்பாலானவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை. இந்த துறையில் குழந்தைகள் வந்தால், அவர்களுக்கு பயிற்சி அளிக்க தயராக இருக்கிறேன். கின்னஸ் அமைப்பினர் அளிக்கும் சான்றிதழுக்காக காத்திருக்கிறேன். விைரவில் எனது சான்றிதழையும், நினைவுப்பரிசையும்,சச்சின் டெண்டுல்கர் கைகளால் பெற விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

click me!