எங்கே இருக்கிறார் ப.சிதம்பரம்...? கண்கொத்தி பாம்பாய் கண்காணிக்கும் சிபிஐ..!

By vinoth kumarFirst Published Aug 21, 2019, 12:12 PM IST
Highlights

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராக அனைத்து விமான நிலையங்களில் அமலாக்கத்துறை லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விமானங்கள் மூலம் ப.சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராக அனைத்து விமான நிலையங்களில் அமலாக்கத்துறை லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விமானங்கள் மூலம் ப.சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருவரும் முன்ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால், ப.சிதம்பரம் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது.

 

இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க இன்று வலியுறுத்த சிதம்பரம் தரப்பில் முறையிட்டனர். அப்போது, இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ரமணா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரம் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில்சிபில் உள்ளிட்ட 3 வழக்கறிஞர்கள் வாதாடினார். ஆனால், ப.சிதம்பரம் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மறுத்து விட்டார். இந்த வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதி முடிவெடுப்பார். அவரை அனுகுங்கள்’’ என ரமணா விலகிக் கொண்டார். 

இதனிடையே, விசாரணைக்கு ஆஜராகும் படி கடந்த 24 மணி நேரத்தில் ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் நான்கு முறை வந்தனர். ஆனால், இதுவரை ப.சிதம்பரம் தலைமறைவாகவே இருந்து வருகிறார்.  

இந்நிலையில் ப.சிதம்பரத்திற்கு எதிராக விமான நிலையங்களில் அமலாக்கத்துறை லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். விமானங்கள் மூலம் ப.சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிரம் காட்டி வருகிறது. 

click me!