அடுத்தடுத்து மனு தள்ளுபடி... சிக்கலில் சிக்கிய ப.சிதம்பரம்..!

By vinoth kumarFirst Published Sep 13, 2019, 3:56 PM IST
Highlights

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 
 

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் ப.சிதம்பரத்தை கடந்த மாதம் 21-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து ப.சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து சிபிஐயின் கோரிக்கையை ஏற்று ப.சிதம்பரத்தை காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே அமலாக்கத்துறை பதிவு செய்திருந்த வழக்கின் விசாரணையும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மறுத்தது. இதனால் தான் அமலாக்கத்துறையிடம் சரணடைய விரும்புவதாக ப.சிதம்பரம் சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், இப்போதைக்கு ப.சிதம்பரத்தை கஸ்டடி எடுக்க வேண்டிய அவசியத்தில் அமலாக்கதுறை இல்லை என்ற காரணத்தினால் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

click me!