குடும்ப சுமையைச் சமாளிக்கவே போர்ட்டர் ஆனேன்... முதல் பெண் போர்ட்டர் உருக்கம்

 
Published : May 28, 2018, 05:41 PM ISTUpdated : Sep 19, 2018, 02:26 AM IST
குடும்ப சுமையைச் சமாளிக்கவே போர்ட்டர் ஆனேன்... முதல் பெண் போர்ட்டர் உருக்கம்

சுருக்கம்

Interview with First Lady Porter Manju Devi

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் மஞ்சு தேவி. இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது கணவர், ஜெய்ப்பூர் ரயில்வே
நிலையத்தில் சுமை தூக்கும் கூலித் தொழிலாளியாக இருந்த வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.  இதனால், குடும்பத்தை கவனிக்கும்
பொறுப்பு இவர் மீது விழுந்தது. 

குடும்ப பாரத்தை தாங்க முடியாத அவர், தனது கணவர் செய்து கொண்டிருந்த சுமை தூக்கும் வேலைக்க்கு செல்லலாம் என்று முடிவெடுத்துள்ளார். தற்போது
அவர், ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக அதாவது போர்ட்டராக வேலை பார்த்து வருகிறார்.

இது குறித்து மஞ்சுதேவி கூறும்போது, எனது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். கஷ்டப்பட்டு குடும்பத்தைக் காப்பாற்றி வந்தேன். ஒரு
கட்டத்தில் குடும்ப சுமையைச் சமாளிக்க முடியாவில்லை. என்ன செய்வது என்று யோசிக்கையில், என் அம்மா, கணவர் செய்த வேலையை எடுத்து செய் என்று கூறினார். அம்மா கொடுத்த தைரியத்தில் தன்னம்பிக்கையுடன் ஜெய்ப்பூர் ரயில்வே நிலையத்தில் கூலி தொழிலாளியாக வேலையில் சேர விண்ணப்பித்தேன்.

என்னுடைய விண்ணப்பத்தைப் பார்த்த ரயில்வே அதிகாரி, சுமை தூக்கும் பெண் கூலிகள் இங்கும் யாரும் வேலை செய்யவில்லை என்றும், ஆண்கள் மட்டுமே
வேலை செய்கிறார்கள் என்றும் கூறினார். அதுவும் ஆண்களுக்கு நிகராக வேலை செய்ய வேண்டும். இது மிகவும் சவாலான பணி. ஒரு முறைக்கு பலமுறை
யோசித்து வேலையில் சேருங்கள் என்று கூறினார்.

ஆனாலும், நான் போர்ட்டர் வேலையில் சேர்ந்தேன். பயணிகளின் சுமைகளைத் தோளில் தூக்கிச் செல்லும்போது, எனது குழந்தைகளுக்கு உணவளிக்க முடியும் என்பதை நினைத்துக் கொள்வேன் அப்போது சுமை கூட சுகமாகத்தான் உள்ளது
என்கிறார் மஞ்சுதேவி.

வடமேற்கு ரயில்வே துறையில் முதல் பெண் சுமை தூக்கும் தொழிலாளியான அவருக்கு போர்ட்டர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அவரது கணவர் பெற்றிருந்த
அடையாள உரிமம் எண் 15 மஞ்சுதேவிக்கும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

வி.வி.ராஜேஷுக்கு லக்..! ஶ்ரீலேகாவுக்கு ஏமாற்றம்.. திருவனந்தபுரம் மேயர் ரேஸில் பாஜகவின் அதிரடி முடிவு
7 மணி ஆனா ஊரே ஆஃப் ஆயிடும்! தினமும் 2 மணி நேரம் டிஜிட்டல் விரதம் இருக்கும் வினோத கிராமம்!