தொடர்ந்து அத்துமீறும் பாகிஸ்தான் – இந்திய வீரர் ஒருவர் பலி..!!

Asianet News Tamil  
Published : Nov 07, 2016, 08:19 AM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
தொடர்ந்து அத்துமீறும் பாகிஸ்தான் – இந்திய வீரர் ஒருவர் பலி..!!

சுருக்கம்

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2௦ ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

உரி தாக்குதலுக்கு பழி தீர்க்கும் விதமாக இந்திய ராணுவ வீரர்கள் எல்லை தாண்டி சென்று பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தனர்..

இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை பாகிஸ்தான் படைகள் 60-க்கும் மேற்பட்ட முறை தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்நிலையில், காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் மன்கோட் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்துள்ள கிருஷ்ணகட்டி பகுதியில் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் படைகள், சுமார் 4 இடங்களில் இன்று அதிகாலை முதல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.

இதற்கு இந்திய ராணுவ வீரர்களும் தகுதி வாய்ந்த ஆயதங்களைக் கொண்டு தக்க பதிலடி கொடுத்தனர்.

இருதரப்பினருக்கும் இடையிலான துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

PREV
click me!

Recommended Stories

LPG Crisis: 10 நாள்ல கேஸ் தீர்ந்துடுமா? போர் பதற்றத்தால் இந்தியாவில் அசாதாரண சூழல்..
பெற்றோர் எதிர்ப்பு.. போலீஸில் தஞ்சம்.. காதலனை கரம் பிடித்த கும்பமேளா வைரல் அழகி மோனலிசா!