ரயில்களின் இருப்பிடத்தை நேரடியாக கண்காணிப்பது, டிக்கெட் முன்பதிவு என அனைத்துக்கும் ஆல் இன் ஒன் 'சூப்பர் செயலி'யை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது
ரயில்களின் நிலை, டிக்கெட் முன்பதிவு என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு தனித்தனி ஆப்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்த நிலையில், ரயில்களின் இருப்பிடத்தை நேரடியாக கண்காணிப்பது, ரயில்களின் நிலை, டிக்கெட் முன்பதிவு, புகார் பதிவு மற்றும் பிற அம்சங்களை உள்ளடக்கிய சூப்பர் செயலி’யை இந்திய ரயில்வே உருவாக்கி வருகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் இயங்குதளங்களில் அந்தந்த ஆப் ஸ்டோர்கள் மூலம் இந்த அப்ளிகேஷனை பெற முடியும்.
பயணிகளின் வசதிக்காக, டிக்கெட் முன்பதிவு, உணவு ஆர்டர் செய்தல் மற்றும் விசாரணைகள் போன்ற பல்வேறு சேவைகளை வழங்கும் ஐ.ஆர்.சி.டி.சி. ஆப், ரயில் சார்த்தி, இந்திய ரயில்வே PNR, தேசிய ரயில் விசாரணை அமைப்பு, Rail Madad, UTS, Food on Track போன்ற 10க்கும் மேற்பட்ட ஆப்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இந்த அனைத்து செயலிகளையும் ஒருங்கிணைப்பதே இந்திய ரயில்வேயின் நோக்கமாகும்.
undefined
ஆனந்த் அம்பானி திருமணம்: வைரலாகும் திருமண அழைப்பிதழ் கடிதம்!
ரயில்வே தகவல் அமைப்பு மையத்தின் (CRIS) கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்திய ரயில்வேயின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளின் மேலாண்மை (ஐடி) நிறுவனத்துக்கு ‘சூப்பர் செயலியை’ உருவாக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
‘சூப்பர் ஆப்’ உருவாக்கம் மற்றும் செயல்பாட்டிற்காக தோராயமாக ரூ.90 கோடியை ரயில்வே ஒதுக்க வேண்டும். இந்திய ரயில்வேயின் பயன்பாடுகளில், IRCTC Rail Connect முதன்மையான தேர்வாக வெளிப்படுகிறது, 100 மில்லியனுக்கும் அதிகமானோர் அந்த ஆப்பை பதிவிறக்கம் செய்துள்ளனர். டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான பிரத்யேக தளமாக இது செயல்படுகிறது. அதேபோல், பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் மற்றும் சீசன் பாஸ்களை வழங்கும் UTS ஆப்பை 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.