Omicron virus : அச்சுறுத்தும் ஓமைக்ரான்… கடும் கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு… டிச.1 முதல் அமல்!!

Published : Nov 29, 2021, 02:52 PM IST
Omicron virus : அச்சுறுத்தும் ஓமைக்ரான்… கடும் கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு… டிச.1 முதல் அமல்!!

சுருக்கம்

#OmicronVirus | ஓமைக்ரான் வகை வைரஸ்  வேகமாக பரவி வரும் நிலையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படும் என்றும் பரிசோதனை முடிவு வரும் வரை அவர் விமான நிலையத்திலேயே தங்கி இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. 

ஓமைக்ரான் வகை வைரஸ்  வேகமாக பரவி வரும் நிலையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படும் என்றும் பரிசோதனை முடிவு வரும் வரை அவர் விமான நிலையத்திலேயே தங்கி இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி ஓமைக்ரான் வகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பின்னர் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் கண்டறியப்பட்டது. இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஓமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டிருக்கும் இந்த ஒமைக்ரான் வகை வைரசால் உலக மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதை விட வீரியமானது இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் என்று கூறப்படுகிறது.  இது 32 முறை உருமாற்றமடைந்து ஓமைக்ரானாக பரவி வருவதாக கூறப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் பரவ ஆரம்பித்த இந்த ஒமைக்ரான், தற்போது பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதனால் அச்சமடைந்த உலக நாடுகள் ஆப்பிரிக்க நாடுகள் இடையேயான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன. மேலும் சில நாடுகள் அந்நாட்டிலிருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கின்றன. இந்த கொரோனா இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் தாக்கும் என சொல்லப்பட்டுள்ளதால் மக்களிடையே கடும் அச்சம் நிலவி வருகிறது. இந்தியாவில் இதுவரை யாரும் ஒமைக்ராவால் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இருந்த போதிலும் பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா ஹாட்ஸ்பாட்களை மிகவும் கவனமாக கவனிக்க வேண்டும் என்றும், ஆர்டிபிசிஆர் சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தென் ஆப்ரிக்கா, சிங்கப்பூர், சீனா, பிரேசில், போத்ஸ்வானா, மொரீஷியஸ்,  இஸ்ரேல், ஹாங்காங், ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகள் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளன. இதை அடுத்து இந்த நாடுகளிலிருந்து இந்தியா வருகை தரும் பயணிகள், பயணத்திற்கு முன்பே கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சவிதா இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படும் என்றும் பரிசோதனை முடிவு வரும் வரை அவர் விமான நிலையத்திலேயே தங்கி இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: ஜெய்ப்பூரில் இரண்டு நாள் கூட்டம்! எப்போது அமலுக்கு வரும்? நிபுணர்கள் சொல்வது என்ன?
Forbidden Island: உள்ளே போனால் உயிரோட திரும்ப முடியாது! இந்தியாவின் பயங்கரமான தீவின் ரகசியம்