காஷ்மீர் பகுதியில் அத்துமீறி தாக்குதல் - பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

First Published Oct 25, 2016, 1:59 AM IST
Highlights


அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு, இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஆர்.எஸ்.புராவில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் கொடுத்தது.

கடந்த ஒரு1 வாரமாக இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாகிச்சூடு நடத்தி வருவது எல்லையில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வவையில், தீவிரவாதிகள் மீது ஐஎஸ்ஐ நடவடிக்கை எடுக்காவிட்டால், நேரடி நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. இந்திய ராணுவ வீரர்களை தாக்கினால், பாகிஸ்தான் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் என்று அமெரிக்கா சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர் அத்துமீறலால் எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லையில் அவ்வப்போது தாக்குதல் நடந்துவரும் நிலையில் அந்நாட்டு ராணுவமும் அவ்வப்போது துப்பாக்கிச்சூடு நடத்தி வருவது இருநாட்டு உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தும், பாகிஸ்தான் ராணுவத்தை கட்டுப்படுத்தாவிட்டால், பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

click me!