இருமடங்கு வேகத்தில் கொரோனா பரவல்.. எங்கும் மரண ஓலம்.. ஒரே நாளில் 1,26,789 பேருக்கு பாதிப்பு..பொதுமக்கள் பீதி.!

Published : Apr 08, 2021, 10:57 AM ISTUpdated : Apr 09, 2021, 11:01 AM IST
இருமடங்கு வேகத்தில் கொரோனா பரவல்.. எங்கும் மரண ஓலம்.. ஒரே நாளில் 1,26,789 பேருக்கு பாதிப்பு..பொதுமக்கள் பீதி.!

சுருக்கம்

இந்தியாவில் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்;- கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  1,26,789ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,29,28,574ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 685 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,66,862ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,18,51,393ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 59,258 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில்  9,10,319 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் நேற்று  ஒரே நாளில் 12,37,781 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 25 கோடியே 26 லட்சத்து 77 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 9,01,98,673 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

மலை போல் குவிந்த எஸ்.ஐ.ஆர். வழக்குகள்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருத்தப்பட்ட வந்தே மாதரம் தான் தேசப் பிரிவினைக்கு காரணமா? அமித் ஷா பேச்சால் சர்ச்சை