இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 5,335 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 25,587 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு பிறகு பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 5,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு;- இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 5,335 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 25,587 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு பிறகு பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நேற்று பாதிப்பை ஒப்பிடுகையில் பாதிப்பு ஒரே நாளில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,47,3954ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 2,826 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று பாதிப்பால் நேற்று கர்நாடகா, மகாராஷ்டிராவில் தலா 2 பேர், பஞ்சாப், கேரளாவில் தலா ஒருவர் என 6 பேர் இறந்துள்ளனர்.
அதிகபட்சமாக கேரளாவில் 1,912 பேரும், மகாராஷ்டிராவில் 569, டெல்லியில் 509, இமாச்சல பிரதேசத்தில் 389, கர்நாடகா, தமிழ்நாட்டில் 242 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 35,97,744ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் 1,216 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் 112 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.