LPG : கேஸ் சிலிண்டருக்கான ‘மானியம்’ உங்களுக்கு கிடைக்கலையா ? கவலைப்படாதீங்க.. இதை செய்யுங்க போதும் !!

By Raghupati RFirst Published Feb 20, 2022, 12:35 PM IST
Highlights

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். இது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. இதற்கிடையில் மத்திய அரசு தொடர்ந்து சிலிண்டர் விலையை உயர்த்தி வருகிறது. இந்த விலை உயர்வு இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கனவே கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரம் இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சிலிண்டரின் விலையை உயர்த்தி வருவது பொருளாதார ரீதியாக சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும் சிலிண்டருக்கான மானியத் தொகையும் வரவு வைக்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்து வருகிறது.

மத்திய அரசானது சிலிண்டர் விலையில் ஒரு குறிப்பிட்ட தொகையை மானியமாக வழங்கி வருகிறது. இத்தொகையானது சிலிண்டர் வாங்கும் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கபடுகிறது. இந்த தொகையானது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். 

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக மானியத்தொகை வரவு வைக்கப்படுவதில்லை என்று கூறுகின்றனர். மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த தொகையயை விரைவில் வரவு வைக்க கோரிக்கைகள் எழுந்தது. இது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தற்போது சிலிண்டர் மானியத்தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது. 

ஆன்லைன் வாயிலாக மானியத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள இங்கே கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றலாம். முதலில் www.mylpg.in என்ற குறிப்பிடப்பட்டுள்ள இந்த தளத்திற்குள் செல்ல வேண்டும். பின் வலதுபக்கத்தில் இருக்கும் ஐகான் மூலம் நீங்கள் பயன்படுத்தி வரும் சிலிண்டர் நிறுவனத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

 இப்போது sign in அல்லது sign up கேட்கும். ஐடி ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்தால் அப்படியே login செய்யலாம் இல்லையென்றால் 'new user' என்ற ஆப்ஷனிற்கு செல்ல வேண்டும். அதன் பிறகு இப்போது புதிய விண்டோ ஓப்பன் ஆகும். அதில் இருக்கும் ’View Cylinder Booking History' என்பதை கிளிக் செய்யுங்கள்.

இதில் உங்களுடைய சிலிண்டர் மானியம் குறித்த அனைத்து தகவல்களும் இருக்கும். அதாவது மானியத் தொகை வந்த கடைசி தேதி, மற்றும் தேவையான அனைத்து தகவலும் இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மானிய தொகை வரவில்லை என்றால் ’ feedback’ என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அதில் நீங்கள் உங்களது புகாரை பதிவு செய்யலாம்.

click me!