வெளிநாட்டு வங்கியில் எனக்கு அக்கவுண்ட் இல்லை... மகன் கார்த்திக்கு மட்டுமே கணக்கு உள்ளதாக சிதம்பரம் அதிர்ச்சி தகவல்..!

By vinoth kumarFirst Published Aug 22, 2019, 5:24 PM IST
Highlights

ஐஎன்எஸ் வழக்கில் சிக்கி இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தற்போது சிபிஐ அலுவலகத்தில் உட்கார வைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஐஎன்எஸ் வழக்கில் சிக்கி இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தற்போது சிபிஐ அலுவலகத்தில் உட்கார வைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையும் 30 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிபிஐ அதிகாரிகளால் 22-ம் தேதி இரவு கைது செய்யப்பட்ட சிதம்பரம் சிபிஐ அலுவலகத்தில் இரவு முழுவதும் உட்கார வைக்கப்பட்டார். அப்போது அதிகாரிகளின் கேள்விக்கு பதிலளித்த சிதம்பரம் தனக்கு எந்த வெளிநாட்டிலும் எந்த வங்கியிலும் கணக்கு கிடையாது. தனது மகன் கார்த்திக் மட்டுமே வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு இருப்பதாக தெரிவித்தார்.

 

மேலும், தனது கருத்துக்களை தெரிவிக்க நீதிபதி சிதம்பரத்திற்கு அனுமதி வழங்கினார். இந்த நிலையில் ப.சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ நீதிபதியை கேட்டுக்கொண்டுள்ளது. சிபிஐயின் இந்த கோரிக்கை ஏற்கப்பட்டதால் ப,சிதம்பரத்திற்கு இது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. 

இருப்பினும் தொடர்ந்து சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி மனு கபில்சிபல் ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகின்றனர். எப்படியாவது சிதம்பரத்தை ஜாமீனில் எடுத்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் வாதாடி வருகிறார்கள். தன் மகனுக்கு மட்டுமே வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு இருக்கிறது என்று சிதம்பரம் கூறியிருப்பது கார்த்தி சிதம்பரத்திற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

click me!