
இன்று (புதன்கிழமை) ஜம்மு-காஷ்மீரின் காண்டர்பால் மாவட்டத்தில் இந்தோ-திபெத்திய எல்லை காவல்படை (ITBP) வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. குல்லான் பகுதிக்கு அருகே உள்ள சிந்து ஆற்றில் வாகனம் சறுக்கி விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்டுப்புக்குழுவினர் பேருந்தில் இருந்த அனைத்து பணியாளர்களும் ஆற்றில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர். இருப்பினும், விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் இருந்த மொத்த நபர்களின் எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.
விபத்தின் போது பேருந்தின் ஓட்டுநர் காயமடைந்ததாகவும், சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவ மையத்திற்கு உடனடியாக மாற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது உடல்நிலை தற்போது மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
விபத்து நடந்த நேரத்தில் அந்தப் பகுதியில் கடுமையான மழை பெய்து கொண்டிருந்தது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததற்கு இதுவே காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.