ஐ.ஏ.எஸ் அதிகாரி மகள் கடத்த முயன்ற விவகாரம் - பாஜக தலைவர் மகனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்...

Asianet News Tamil  
Published : Aug 12, 2017, 06:13 PM ISTUpdated : Sep 19, 2018, 01:00 AM IST
ஐ.ஏ.எஸ் அதிகாரி மகள் கடத்த முயன்ற விவகாரம் - பாஜக தலைவர் மகனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்...

சுருக்கம்

Haryana state BJP leader in case of attempt to kidnap IAS officers daughter The judges have ordered a 14-day judicial custody of the leaders son Vikas Parola.

ஐ.ஏ.எஸ் அதிகாரி மகள் கடத்த முயன்ற வழக்கில் அரியானா மாநில பா.ஜ.க. தலைவரின் மகன் விகாஸ் பராலாவை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

அரியானா மாநில பாஜக தலைவர் சுபாஷ் பராலாவின் மகன் விகாஸ் பராலா. இவர் சமீபத்தில் தனது நண்பரான ஆஷிஷ் குமார் என்பவருடன் சேர்ந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் மகளை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து அந்த பெண், இது குறித்து போலீசில் புகார் செய்தார்.

அதன்படி போலீசார் விகாஸ் பராலா மற்றும் அவரது நண்பரிடம் விசாரணை நடத்தினர். ஆனால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இதற்கிடையே, விசாரணைக்காக விகாஸ் பராலா மற்றும் அவரது நண்பர் ஆஷிஷ் குமார் ஆகியோர் சண்டிகர் காவல் நிலையத்தில் ஆஜராகினர். 

அப்போது போலீசார் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.

போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில், விகாஸ் பராலா மற்றும் அவரது நண்பர் ஆஷிஷ் குமார் ஆகியோர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். 

அப்போது, விகாஸ் பராலா மற்றும் அவரது நண்பர் ஆஷிஷ் குமார் ஆகியோரை ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை, 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி கவுரவ் தத்தா உத்தரவிட்டார். 

PREV
click me!

Recommended Stories

இந்தியாவின் நேரடி வரி வசூல் ₹18.38 லட்சம் கோடி..! டிரம்பின் வரி அடாவடியிலும் அசத்தல் வரப்பிரசாதம்..!
‘முடிந்தால் என் காலை வெட்டுங்கள்...’ மிரட்டும் சிவசேனா... அண்ணாமலை பகிரங்க சவால்..!