ஹரியானாவில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறதா பாஜக? பின் தங்கியது காங்கிரஸ்!!

By Dhanalakshmi GFirst Published Oct 8, 2024, 12:46 PM IST
Highlights

ஹரியானாவில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த வெற்றிக்குக் காரணம் என்ன, காங்கிரஸ் ஏன் பின்னடைவைச் சந்தித்தது, விவசாயிகள் போராட்டத்தின் தாக்கம் என்ன என்பதை பார்க்கலாம். 

தற்போதைய நிலவரப்படி ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி 35 இடங்களிலும், பாஜக 49 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. தொடர்ந்து பத்தாண்டுகள் ஆட்சி செய்து வந்த பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி பிடிக்கும் என்பது தெளிவாகிறது. துவக்கத்தில் அதிக இடங்களில் முன்னிலை வகித்த காங்கிரஸ் கட்சி தற்போது பின்னடவை சந்தித்து வருகிறது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில் ஏழு முடிவுகள் காங்கிரஸ் சுமார் 55 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணித்து இருந்தன. 46 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் தற்போது பாஜக 49 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. தனி மெஜாரிட்டியுடன் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

Latest Videos

ஹரியானாவில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று அந்த மாநிலத்தின் பாஜக முதல்வர் நயப் சிங் சைனி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர் அளித்து இருக்கும் பேட்டியில், ''கடந்த பத்தாண்டுகளாக வளர்ச்சிப் பணிகளில் பாஜக அக்கறை செலுத்தி நிறைவேற்றியுள்ளது. தொடர்ந்து நாங்கள் மாநிலத்துக்கு அனைத்து நன்மைகளையும் கொண்டு வருவோம். இது எங்களுடைய பொறுப்பு'' என்று தெரிவித்துள்ளார்.

IRCTCயின் அசத்தல் ஸ்கீம்: ரயில் புறப்படுவதற்கு 10 நிமிடம் முன்பு கன்பார்ம் டிக்கெட் - எப்படி எடுக்கலாம்?

ஹரியானாவில் கூட்டணி ஆட்சி:
கடந்த 2019ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக 40 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், ஜனநாயக ஜனதா கட்சி 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருந்தன. ஜனநாயக ஜனதா கட்சி ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்து இருந்தது. இதேபோல் 2019 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 10 மக்களவை தொகுதிகளிலும் பாஜக 5ல் வெற்றி பெற்று இருந்தது. இந்த முறை பாஜக கட்சி தனித்து 89 இடங்களில் போட்டியிட்டு இருந்தது. காங்கிரஸ் 2014, 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் பெரிய அளவில் தோல்வியை சந்தித்து இருந்தன. ஆனால், இந்த தேர்தலில் ஹரியனாவில் கூடுதல் இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. 

விவசாயிகள் போராட்டம்:
பாஜக மீது தேர்தல் நேரத்தில் அதிகளவிலான குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டன. விவசாயிகள் போராட்டத்தின்போது ஹரியானா - டெல்லி எல்லையில் இருக்கும் சிங்கு பகுதியில் விவசாயிகளை பாஜக அரசு கட்டுப்படுத்தியது. இதையடுத்து, ஹரியானா அரசின் உத்தரவின் பேரில்தான் போலீசார்  தங்களை கட்டுப்படுத்தியதாக விவசாயிகள் நம்பினர். இதுபோன்ற நடவடிக்கைகள் பாஜக அரசு மீது விவசாயிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. 

போலீசுக்கு 'ஈ-பென்ஷன்' உட்பட பல சலுகைகள்! வாரி வழங்கும் யோகி அரசு!

காங்கிரசில் வினேஷ் போகட்:
இத்துடன் மல்யுத்த வீரர்களான வினேஷ் போகட், பஜ்ரங் புனியா ஆகியோரும் பாஜகவுக்கு எதிராக ஹரியானாவில் தலை தூக்கினர். இவர்கள் இருவரும் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். பொதுவாக ஹரியானா மாநில மக்கள் மல்யுத்தத்தை விரும்புபவர்கள். இதுவும் பாஜகவுக்கு எதிராக மாறும் என்று கருதப்பட்டது. அக்னிவீர் திட்டமும் பாஜகவுக்கு இந்த மாநிலத்தில் நெகடிவ் ரிசல்ட் கொடுக்கும் என்று கூறப்பட்டது.  

பாஜகவின் ஆட்சி மாற்றம்:
ஆனால், ஹரியானாவில் பாப்புலர் அரசியல்வாதியாகவும், முதல்வராகவும் இருந்த மனோகர் லால் கட்டரை பாஜக தலைமை பொறுப்பில் இருந்து அகற்றியது. இவர் பஞ்சாப் முகமாக அறியப்பட்டவர். முகமே தெரியாத நயப் சிங் சைனியை முதல்வராக்கியது பாஜக. அதேசமயம், சைனி சமுதாயத்தின் வாக்குகளை ஈர்ப்பதற்காக பாஜக நயப் சிங்கை தேர்வு செய்து இருந்தது. அது தற்போது பாஜகவுக்கு தேர்தல் வெற்றிக்கு கை கொடுத்துள்ளது என்று கூறலாம். 

ஹரியானாவில் பாஜக அதிரடியாக முதல்வரை மாற்றியபோது, பலருக்கும் சந்தேகம் இருந்தது. சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தால் இது மத்தியில் பாஜக தலைமைக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது. இத்துடன். அடுத்து நடக்கவிருக்கும் மகாராஷ்டிரா மாநில தேர்தலில் இது பிரதிபலிக்கும் என்று கருதப்பட்டது.  

குருகிராம் vs நொய்டா வருமானம்:
ஹரியானாவின் முக்கிய வர்த்தக மையமான குருகிராமை தனது கட்டுப்பாட்டில் தக்க வைத்துக்கொள்வதே பாஜகவின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. 2022-23 ல் கலால் வரி, விற்பனை வரி மற்றும் பதிவுக் கட்டணங்கள் என மாநிலத்தின் வருவாயில் அதாவது ரூ. 2,600 கோடியை குருகிராம் கொடுத்துள்ளது. அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தின் பிரபலமான நொய்டா இதே கால கட்டத்தில் ரூ.1,975 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. இங்கும் பாஜக ஆட்சிதான் நடக்கிறது. 

வினேஷ் போகட்:
காங்கிரஸ் வேட்பாளராக  ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் 4000த்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலை தற்போது வகித்து வருகிறார். 

click me!