
உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத், பா.ஜனதா எம்.பி. ஆர்.பி. சர்மா ஆகியோர் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, நடந்த ஒரு கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஆதிவாசி பெண்ணின் நிர்வாணப்படத்தை தற்போது பேஸ்புக்கில் வௌியிட்டதற்காக பாதிக்கப்பட்ட அந்த பெண் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சர்ச்சைபடம்
உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தை பேஸ்புக்கில் 95 ஆயிரம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இதைப் பயன்படுத்தி, அரசியல் உள்நோக்கத்துடன் பா.ஜனதாவின் தேஜ்பூர் எம்.பி. ஆர்.பி. சர்மா சார்பில் தற்போது ஒரு புகைப்படம் வௌியிடப்பட்டுள்ளது.
பெண் நிர்வாணம்
கடந்த 2007ம் ஆண்டு, நவம்பர் 26-ந் தேதி அசாம் மாநிலம் கவுகாத்தியில் பெரிய கலவரம் மூண்டது. அப்போது ஆதிவாசி பெண்ணான லட்சுமி ஓரங் என்பவரை சிலர் துரத்தி, துரத்தி மானபங்கம் செய்து, அந்த பெண்ணின் உடைகளைக் களைந்து சாலையில் நிர்வாணப்படுத்தினர்.
இந்த விவகாரம் அப்போது பெரிய விஸ்வரூபம் எடுத்து, நாடுமுழுவதும் சர்ச்சைக்குள்ளானது. அதன்பின் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதில் பாதிக்கப்பட்ட லட்சுமி ஓரங்குக்கு திருமணமாகி, 2 வயதில் ஒரு மகன் உள்ளார். அமைதியான குடும்பவாழ்க்கையை நடத்தி வருகிறார்.
காங்கிரஸ் மீது பழி
இந்த சூழலில், முதல்வர் யோகி ஆதிதயநாத்தின் பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அந்த பெண்ணின் படம் வௌயிடப்பட்டுள்ளது. அதாவது, லட்சுமி ஓரங்கின்அப்போதைய நிர்வாணப்படத்தை வௌியிட்டு, ‘காங்கிரஸ் தொண்டர்கள் இந்து பெண்ணை எப்படி சீரழிக்கிறார்கள்’. ‘இந்த பதிவை அனைவரும் மக்கள் மத்தியில் பரப்பி, காங்கிரஸ் கட்சியின் முகத்தரையை கிழிக்க வேண்டும்’ என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் மோடி, பா.ஜனதா கட்சி குறித்து புகழ்ந்து எழுதப்பட்டு இருந்தது.
புகார்
இந்நிலையில், பேஸ்புக்கில் இந்த படத்தை பார்த்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அசாம்அனைத்து ஆதிவாசி மாணவர்கள் அமைப்பு இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
இது தொடர்பாக அசாம் போலீஸ் டி.ஜி.பி. முகேஸ் சாஹேயிடம் புகார் அளித்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் படத்தைப் பயன்படுத்தி, தவறான பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது, இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
வழக்கு
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண் லட்சுமி ஓரங்க இது தொடர்பாக அசாமில் பிஸ்வாந்த்சைராலி மாவட்ட நீதிமன்றத்தில் முதல்வர ஆதித்யநாத், எம்.பி. சர்மா மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆதித்யநாத் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
இது குறித்து லட்சுமி ஓரங் கூறுகையில், “ இந்த விவகாரம் தொடர்பாக நான் வழக்கறிஞர்களுடன் தீவிரமாக ஆலோசனை செய்து, யோகி ஆதித்யநாத், எம்.பிஆர்.பி.சர்மா ஆகியோர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன். இதுபோன்ற புகைப்படத்தை வௌியிடும்போது, முதல்வர்ஆதித்யநாத் கவனமாக இருக்க வேண்டும். அவரின் குடும்ப உறுப்பினராக நான் இருந்தால் இப்படி செய்வார்களா?. என் நிர்வாணப் புகைப்படத்தை தவறாகப்பயன்படுத்தினால் நான் பொறுமையாக இருக்கமாட்டேன். கடந்த 10 ஆண்டுகளாகமனதளவில் நான் பாதிக்கப்பட்டு இருக்கறேன்’’ என்றார்.