Prophet Row: முகமது நபிகள் குறித்த சர்ச்சை கருத்து... மேற்கு வங்கத்தில் கடும் போராட்டம்...!

By Kevin KaarkiFirst Published Jun 14, 2022, 10:34 AM IST
Highlights

பல்வேறு உலக நாடுகளில் முகமது நபிகள் குறித்த சர்ச்சை கருத்து தெரிவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 

மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பம் மாவட்டத்தை சேர்ந்த பொது மக்கள் முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்து பா.ஜ.க. கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டு பேரணி நடத்தினர்.

மேற்கு வங்கம் மட்டும் இன்றி பஞ்சாப், டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ஜார்கண்ட் மற்றும் உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த முன்னாள் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா மற்றும் நவீன் குமார் ஜிந்தால் ஆகியோருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. 

அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு:

இது மட்டும் இன்றி முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவிக்கப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு அரபு நாடுகள் தங்களின் எதிர்ப்பு மற்றும் கண்டனங்களை பதிவு செய்தன. பல்வேறு நாடுகளிலும் இந்த விவகாரம் தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 

காவல் துறை மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற சூழல் எழுந்து இருப்பதை அடுத்து, போலீசார் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாநில மற்றும் யூனியன் பிரதேச காவல் துறை தலைவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. 

மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை:

இது தொடர்பாக கடந்த வெள்ளிக் கிழமை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச காவல் துறை தலைவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. இதே தகவலை மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தி இருக்கிறார். வன்முறை சமயத்தில் போலீசார் குறி வைக்கப்படலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் காவல் துறை தலைவர்களிடம் தெரிவித்து இருப்பதாக அவர் தெரிவித்து உள்ளார். 

click me!