மாடுகளை விட பெண்கள் மீது கவனம் செலுத்துங்கள்... மோடிக்கு பிரபல அழகி அட்வைஸ்..!

Published : Oct 17, 2019, 04:15 PM IST
மாடுகளை விட பெண்கள் மீது கவனம் செலுத்துங்கள்... மோடிக்கு பிரபல அழகி அட்வைஸ்..!

சுருக்கம்

‘மாடுகளை விட பெண்கள் மீது அதிக கவனம் செலுத்துங்கள்’என்று கூறுவேன் எனத் தெரிவித்தார்.  

மோடியை சந்தித்தால் மாடுகளை விட பெண்கள் மீது அதிக கவனம் செலுத்துங்கள் என்று கூறுவேன் என நாகலாந்து அழகி அதிர்ச்சி அளித்துள்ளார். 

நாகலாந்து தலைநகர் ஹோமியோவில் மிஸ் கோஹிமா அழகிப்போட்டி நடைபெற்றது. 1989 ஆம் ஆண்டிலிருந்து இந்த போட்டிகள் நடத்தப்பட்டு  வருகிறது. இந்த ஆண்டு 12 பெண்கள் கிரீடத்திற்காக போட்டியிட்டனர். இந்த  போட்டி பெமினாவுடன் இணைக்கப்படவில்லை, அதிகாரப்பூர்வ மிஸ் இந்தியா போட்டியை ஏற்பாடு செய்கிறது.

பெமினா மிஸ் இந்தியா நாகாலாந்து என்ற மற்றொரு போட்டியை ஏற்பாடு செய்கிறது. இருப்பினும், முந்தைய போட்டியாளர்கள் மற்றும் மிஸ் கோஹிமா பட்டத்தை வென்றவர்கள் மற்ற தளங்களில்  சுயமாக  பங்கேற்றனர்.  விக்கோனுவோ சச்சு என்ற 18 வயது பெண்ணும் கலந்து கொண்டார். அழகி போட்டியின் கேள்வி பதில் சுற்றின் போது நடுவர்கள் அவரிடம் ‘பிரதமர் மோடியுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் அவரிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள்’என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் ‘மாடுகளை விட பெண்கள் மீது அதிக கவனம் செலுத்துங்கள்’என்று கூறுவேன் எனத் தெரிவித்தார்.

இந்தப் பதிலைக் கேட்ட நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் பலமாக சிரித்தனர். அந்த பெண் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

விக்கோனுவோ சச்சு  மிஸ் கோஹிமா அழகுப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். ரியெனுவோ லீஜீட்சு பெண் 2019 மிஸ் கோஹிமாவாக பட்டம் பெற்றார். இந்த வீடியோவை நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!