ஃபிளிப் கார்ட் டெலிவரி பாயை சரமாரியாக கத்தியால் குத்திய பெண்!! எதற்கு தெரியுமா ?

 
Published : Mar 31, 2018, 07:54 AM ISTUpdated : Sep 19, 2018, 02:11 AM IST
ஃபிளிப் கார்ட் டெலிவரி பாயை சரமாரியாக கத்தியால் குத்திய பெண்!! எதற்கு தெரியுமா ?

சுருக்கம்

flipcart delivery boy attacked by a lady in delhi

டெல்லியில் ஃபிளிப்கார்ட்  நிறுவனத்தில் ஆர்டர் செய்த செல்போனை டெலிவரி பாய் தாமதமாக கொண்டு வந்ததால் ஆத்திரமடைந்த பெண் அந்த இளைஞரை  20 முறை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்தவர் கமல் தீப்  என்ற பெண் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில்  11 ஆயிரம் ரூபாய்க்கு ஸ்மார்ட்போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அவரது ஆர்டர் மார்ச்  21-ம் தேதி டெலிவரி செய்யப்படும் என ஃபிளிப்கார்ட்  நிறுவனம் தெரிவித்திருந்தது.

ஆனால் அந்த போனை டெலிவரி செய்யும்  கேசவ் என்ற இளைஞர், கமல் தீப் வீட்டின் சரியான முகவரி தெரியாததால், 2 நாட்கள் தாமதமாக அந்தப் பெண்ணிடம்  கொண்டு வந்து சேர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கமல் தீப், டெலிவரி செய்ய வந்த அந்த இளைஞரை 20 முறைக்கு மேல் கத்தியால் குத்தியுள்ளார். 


 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஃபிளிப்கார்ட் ஊழியரை மீட்டு மருத்துவமனையில்  சேர்ந்ததனர்.  ஊழியரை தாக்கிய கமல் தீப்பை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் கேசவ் அளித்த வாக்குமூலத்தையும், சி.சி.டி.வி. பதிவுகளையும் வைத்து அந்த இளைஞரை தாக்கிய பெண்ணையும், அவரது சகோதரரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு ப்ளிப்கார்ட் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. தாக்கப்பட்ட நபருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும், இனி இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துகொள்ளப்படும் எனவும் ப்ளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!