கட்டிட தொழிலாளர்கள், ஈபிஎஃப், இலவச கேஸ்.. நிதியமைச்சரின், அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய அதிரடி அறிவிப்புகள்

By karthikeyan VFirst Published Mar 26, 2020, 2:51 PM IST
Highlights

கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
 

கொரோனா அச்சுறுத்தலின் விளைவாக, கொரோனாவிலிருந்து மக்களை காப்பதற்காக ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பொதுமக்கள் யாரும் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் விளைவாக பணிக்கு செல்ல முடியாத ஊழியர்களுக்கு ஊதியத்தை பிடித்தம் செய்யாமல் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார்.

ஆனாலும் தினக்கூலி தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், ஏழை, எளிய மக்கள் இந்த ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

இந்நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார் நிர்மலா சீதாராமன். அவர் வெளியிட்ட அறிவுப்புகள் இதோ..

1. 100 ஊழியர்களுக்கு குறைவாக கொண்ட நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களும் அந்த நிறுவனமும் அடுத்த 3 மாதங்களுக்கு பிஎஃப் கட்ட தேவையில்லை. இருதரப்புக்கான பிஎஃப் தொகையையுமே அரசே கட்டும். 15 ஆயிரத்துக்கு குறைவான ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு மட்டுமே இது பொரு 

2. 63 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் நாடு முழுவதும் உள்ளன. அதிலிருந்து ரூ.10 லட்சம் வரை வழங்கப்பட்டுவந்த கடன் தொகை ரூ.20 லட்சமாக அதிகப்படுத்தப்படுகிறது. மகளின் ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு மாதம் ரூ.500 அவர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.

3.  வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள 8.3 கோடி குடும்பங்களுக்கு அடுத்த 3 மாதத்திற்கு கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்.

4. 3.5 கோடி கட்டிட தொழிலாளர்களுக்கு,  ரூ.31 ஆயிரம் கோடி சிறப்பு நிதி உள்ளது. அதை மாநில அரசுகள் பயன்படுத்தலாம்.

5. 100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு தின ஊதியம் ரூ.182லிருந்து ரூ.202ஆக உயர்த்தி வழங்கப்படும். 

மேலும், கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் மீள இரவு பகலாக உழைக்கும் மருத்துவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு வழங்குவது, இலவச அரிசி, பருப்பு வழங்குவது என அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
 

click me!