
விவசாயுகளின் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்வதாக முதல்-மந்திரி வசுந்தரா ராஜே அறிவித்துள்ளார்.
இதன்படி ரூ.50 ஆயிரம் வரையிலான கூட்டுறவு கடன்கள் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும். இதன் மூலம் 20 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும், இதன் மூலம், அரசுக்கு ரூ.8 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப் பட்டு உள்ளது
இந்த திடீர் அறிவிப்புக்கு காரணம் என்னவாக இருக்கும் என நினைத்து பார்த்தால்,
பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வரும் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கார் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் பாரதிய ஜனதாவிற்கு நாடு முழுவதும் மக்கள் மத்தியில் கொஞ்சம் செல்வாக்கு குறைவதால், இதனை ஈடு செய்யும் பொருட்டு விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை ரத்து செய்யும் முடிவை எடுத்துள்ளது அரசு.
ஏற்கனவே மராட்டியம், உத்தரபிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் கடன்கள் தள்ளுடி செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து தற்போது ராஜஸ்தானில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பலனா? பாதிப்பா?
கூட்டுறவு கடன்கள் மட்டும் தான் தள்ளுபடி செய்யப் பட்டு உள்ளது.ஆனால் பெரும்பாலான விவசாயிகள் மற்ற வாங்கிகளில் கடன் பெற்று உள்ளதால், அவர்களால் இந்த50 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியை கூட பெற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதன் மூலம்,கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கிய விவசாயிகள் மட்டுமே பயன்பெறுவார்கள் என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.
கூட்டுறவு வங்கியில் வாங்கிய "விவசாய கடன் தள்ளுபடி"..! விவசாயிகள் மகிழ்ச்சி....