திருமணத்தில் கள்ளசாராய விருந்து - 200 பேர் கைது!

Asianet News Tamil  
Published : Dec 23, 2016, 03:21 PM ISTUpdated : Sep 19, 2018, 02:53 AM IST
திருமணத்தில் கள்ளசாராய விருந்து -  200 பேர் கைது!

சுருக்கம்

குஜராத் மாநிலத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கள்ளச்சாராயம் வழங்கிய சம்பவம் தொடர்பாக, 200க்‍கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகாத்மா காந்தியடிகள் பிறந்த மாநிலம் என்பதால், குஜராத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மதுவிலக்‍கு அமலில் இருந்து வருகிறது. ஆனாலும், சில பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு விற்பனை செய்யப்படும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.

இந்த நிலையில் அம்மாநிலத்தின் வதோதர நகர் அருகே ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்‍கு சட்டவிரோதமாக தயாரிக்‍கப்பட்ட மதுபானங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் விரைந்துசென்ற காவல்துறையினர் திருமணம் நடைபெற்ற பண்ணை வீட்டை சுற்றிவளைத்து அதிரடி நடவடிக்‍கை மேற்கொண்டனர். அங்கு கள்ளச்சாராயம் வழங்கியவர்கள், அருந்தியவர்கள் உட்பட இதில் தொடர்புடைய 200 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

PREV
click me!

Recommended Stories

ரயில் டிக்கெட்டில் 3% தள்ளுபடி..! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க
வைரல் ஆன 'கும்பமேளா' மோனலிசா திருமணம்: போக்சோ சட்டத்தில் போலீஸ் அதிரடி - என்ன நடந்தது? காதலா? சட்டமா?