
நாட்டின் 13 வது குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் இன்றுடன் முடிவடைவைதையொட்டி ஒவ்வொரு நாளும் நாட்டுக்காக கடைமையாற்றினேன் என நாட்டு மக்களுக்கு பிரிவு உரையாற்றினார் பிரணாப்.
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் அடுத்த குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெற்று முடிவைடைந்தது.
இந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக ராம்நாத் கோவிந்தும், எதிர்கட்சி வேட்பாளராக மீராக்குமாரும் போட்டியிட்டனர்.
இதில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்று குடியரசு தலைவர் பதவிக்கு தேர்வாகியுள்ளார்.
இதைதொடர்ந்து குடியரசு தலைவர் பதவியில் இருந்து இன்றுடன் பிரணாப் முகர்ஜி ஓய்வு பெறுவதையடுத்து அவருக்கு பிரிவு உபசார விழா நேற்று நாடாளுமன்றத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.
இதையடுத்து இன்று ஜனாதிபதி மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், எனது பதவி காலத்தில் ஒவ்வொரு நாளும் நாட்டிற்காகவே கடமையாற்றியுள்ளேன் எனவும், கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் புதியவற்றை கற்றுக்கொண்டேன் எனவும் தெரிவித்தார்.
நாடாளுமன்றம் எனது கோயில் எனவும், அரசியலமைப்பு எனது புனித நூல் எனவும், பேசினார்.
அனைத்து விதமான வன்முறைகளில் இருந்தும் நாம் விடுபட வேண்டும் எனவும், ஏழை மக்களின் வாழ்வை காக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.